உள்ளடக்கத்துக்குச் செல்

நிலையாமை

விக்கிமேற்கோள் இலிருந்து

நிலையாமை என்பது உலகியல் வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும் ஒரு பதம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • மனிதனுடைய தேவைகள் சுருக்கம். அவையும் அதிக நாள் தேவையில்லை. இயற்கை அவனுக்கு ஒரு மணி நேரம் அளித்துள்ள உடலைக்கூட அவன் மண்ணிலே சேர்த்துவிட வேண்டியிருக்கின்றது. -யங்[1]
  • நம் எதிரிகளும் நண்பர்களும் நம் கண் முன்பே ஊர்ந்து சென்றுவிடுகின்றனர். நாமும் மரிக்க வேண்டிய பொதுவான சட்டத்திற்கு அடங்கியவர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. விரைவிலே நாம் போய்ச் சேருமிடத்தில் நம்முடைய கதி நிரந்தரமாக உறுதி செய்யப்படும். -ஜான்ஸன்[1]
  • மரணம் வாழ்வின் சிகரம்: மரணம் இல்லையென்றால், வாழ்வது வாழ்வாகாது. மூடர்கள்கூடச் சாகவே விரும்புவர். -யங்[1]
  • ஓ! அநித்தியமான வாழ்வு காற்றைப் போன்றது. அது ஒரு முனகுதல். ஒரு பெருமூச்சு. ஓர் அழுகை அல்லது ஒரு புயல், ஒரு போராட்டம். - எட்வின் ஆர்னால்டு[1]
  • நல்லவர்கள் முன்னதாக இறந்துவிடுகின்றனர்: கோடை காலத்துப் புழுதி போல உலர்ந்த இதயங்களையுடையவர்கள் விளக்கில் திரி தீருகிறவரை எரிந்துகொண்டிருப்பார்கள். - வோர்ட்ஸ்வொர்த்[1]
  • யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
    யாக்கையால் ஆய பயன்கொள்க - யாக்கை
    மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
    நிலையாது நீத்து விடும். - நாலடியார்[1]

மேற்கோள்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 24-25. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நிலையாமை&oldid=35472" இலிருந்து மீள்விக்கப்பட்டது