உள்ளடக்கத்துக்குச் செல்

நிவேதா பெத்துராஜ்

விக்கிமேற்கோள் இலிருந்து

நிவேதா பெத்துராஜ் (Nivetha Pethuraj, பிறப்பு: 30 நவம்பர், 1990) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  • நாட்டில் நிறையப் பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது, அதில் ஒரு சில பிரச்சனைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்று தான் பெண்கள் பாதுகாப்பு. இந்த காணொளியைப் பார்க்கும் நிறையப் பெண்களும் சரி, ஆண்களும் சரி சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்போம். நான் உள்பட 5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி அம்மா அப்பாவிடம் சென்று கூறுவேன்? எனக்கு அப்போது என்ன நடந்தது என எதுவும் தெரியாது? பொதுவாக இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் எல்லாம் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. நமக்கு தெரிந்த உறவினர்கள், பக்கத்துவீட்டுக்காரர்கள் மூலமாகத் தான் நடக்கும். எனவே எல்லா பெற்றோர்களும் தயவுகூர்ந்து பொறுப்புடன் இருங்கள். உங்கள் குழந்தையின் முன் அமர்ந்து பேச ஆரம்பியுங்கள். யார் எப்படிப் பேசினால் தப்பு? எப்படித் தொட்டால் தப்பு? என இரண்டு வயதிலிருந்தே பேச ஆரம்பியுங்கள். குழந்தைகளுக்குப் பள்ளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. தனிப்பயிற்சியில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. எனவே சிறுவயதிலிருந்தே பாதுகாப்பு குறித்துக் கற்பியுங்கள். ஒவ்வொரு தெருவில் வசிக்கும் ஆண் நண்பர்களும் ஒரு எட்டு பத்து பேராகக் குழுவாக இணைந்துகொள்ளுங்கள். அதில் தினமும் இரண்டு பேர் உங்கள் தெருவில் என்ன நடக்கிறது எனக் கண்காணியுங்கள். அப்போது சில தவறுகள் நடந்தால் நீங்கள் கண்டுபிடிக்கலாம். அதனை தட்டியும் கேட்கலாம். மொத்தமாக நாம் காவல்துறையினரை நம்பியே இருக்க முடியாது. தற்போது எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்கத் தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல் மிகத் தவறானது. இதனை அழித்தால் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம்.
  • மீடூ பிரச்சினையில் நானும் சிக்கியிருக்கிறேன். ஒரு பாட்டிக்குச் சென்றபோது அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. தவறு என் மீது தான். நான் அந்த பாட்டிக்குப் போயிருக்கக் கூடாது. போகாமலிருந்திருந்தால், அந்த கசப்பான அனுபவத்தைத் தவிர்த்திருக்கலாம். பெண்களிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால் அந்த இடத்திலே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இப்போது, அதுபோல சம்பவம் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். அந்த விடயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன்.
  • அண்மைக்காலமாக எனக்காகப் பணம் செலவிடப்படுவதாகத் தவறான செய்திகள் பரவி வருகின்றன. இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்பும் சிலர் மனிதாபிமானத்துடன் இத்தகவல்களைச் சரிபார்ப்பார்கள் என எண்ணி அமைதியாக இருந்தேன். கடந்த சில நாட்களாகப் பரவும் பொய்ச் செய்தியால், நானும் என் குடும்பமும் மிகப்பெரிய மன உளைச்சலில் இருக்கிறோம். இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பும் முன் யோசித்துப் பாருங்கள். நான் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். என்னுடைய 16 வயதிலிருந்து நான் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் வாழ்ந்து வருகிறேன். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகத் துபாயில் வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வருகிறோம் ...... 2013 ஆம் ஆண்டிலிருந்து தானுந்து விளையாட்டுக்களில் விருப்பத்தின் பேரில் நான் ஈடுபட்டு வருகிறேன். அதிலும் சென்னையில் நடக்கும் போட்டிகள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இதுதவிர என்னைப் பற்றி இதுவரையில் பேசப்படும் அவதூறுகளில் எதுவுமே உண்மையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...... இதை நான் சட்டரீதியாக எடுத்துச் செல்லவில்லை, இன்னும் பத்திரிகைத் துறையில் மனிதம் மீதமிருக்கிறது என்பதை நம்புகிறேன். பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வரும் செய்திகளைச் சரிபார்த்துவிட்டுப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்தை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள். எனக்காக இதுவரையில் பேசிய அனைவருக்கும் நன்றி.

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=நிவேதா_பெத்துராஜ்&oldid=38268" இலிருந்து மீள்விக்கப்பட்டது