நீதிமொழிகள்
Appearance
நீதிமொழிகள் என்பது பிரபலமாக அறியப்பட்ட மற்றும் மீண்டும் மீண்டும் கூறப்படும் எளியதும், உறுதியானதுமான சொற்கள், இவை பொது அறிவு அல்லது மனிதகுலத்தின் நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- நமது வாழ்க்கையை முறைப்படுத்திக்கொள்ளவும், உணர்ச்சிகளை நிதானப்படுத்திக்கொள்ளவும் நீதி வாக்கியங்களை விதித்து அருளியவன். இப்பொழுது மட்டுமன்றி, பின்வரும் தலைமுறைகளிலும் மனித இயற்கைக்குப் பெரிய நன்மையைச் செய்தவனாவான். - ஸெனீகா[1]
- செய்வதற்கு எது நல்லது என்று தெரிந்துகொள்வதைப் போலச் செய்வதும் அவ்வளவு எளிதாக இருந்தால், வீட்டுக் கோயில்களெல்லாம் பெரிய மாதாகோயில்களாகிவிடும். ஏழை மனிதர்களின் குடிசைகளெல்லாம் அரசர்களின் அரண்மனைகளாகிவிடும். ஒரு சமய குரு தாமே தம் உபதேசங்களின்படி நடந்தால் நல்லதுதான். செய்வதற்கு எது நல்லது என்பதை நான் இருபது பேர்களுக்கு எளிதாகக் கற்றுக்கொடுக்க முடியும். ஆனால், அந்த இருபது பேர்களுள் ஒருவனாக இருந்து என் உபதேசங்களின்படி நடப்பதுதான் அகைவிடக் கடினம் - ஷேக்ஸ்பியர்[1]
- நல்ல உபதேசங்களைச் செய்பவர் அவைகளின்படி நடக்காவிட்டால், அவர் வெளி வேடக்கார்ரென்று பொதுவாகக் கூறுவது வழக்கம். இது அநீதியாகக் குற்றம் சாட்டுவதாகும். அவர் தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வதன் நன்மைகளை உண்மையிலேயே நம்பியிருப்பர். ஆனால், அதில் அந்தச் சமயம் அவர் வெற்றி பெறாமலிருக்கலாம்; ஒரு கடல்யாத்திரை அல்லது பிரயாணம்பற்றி ஒரு மனிதன் நம்பி, தான் போவதற்குத் தைரியமோ ஊக்கமோ இல்லாமல், மற்றவர்கள் போகும்படி உற்சாகப்படுத்தக்கூடும். - -ஜான்ஸன்[1]
- நீதி மொழிகளைக்காட்டிலும் பிறர் காட்டும் மாதிரியையே பலர் பின்பற்றுகின்றனர். ஆனால், மாதிரியைக்காட்டிலும், நேரடியாக நீதிமொழிகளிடமிருந்தே கற்றுக்கொள்வதுதான் மேலானது. - வார்விக்[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 242-243. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.