நோய்
நோய் (வியாதி, பிணி) என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று.
மேற்கோள்கள்
[தொகு]- நோய், இளமையில் தோன்றும் ஒரு வகை முதுமை உலக வாழ்க்கையில் நமது நம்பிக்கை குறைவதற்கு அது கற்பிக்கின்றது. -போப்[1]
- இயற்கையின் விதிகளை மீறுவதற்கு. அது அளிக்கும் தண்டனையே நோய் - ஸிம்மன்ஸ்[1]
- பிணியிருக்கும் பொழுதுதான் நாம் அனுதாபத்தை அதிகமாக வேண்டுகிறோம். நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு சார்ந்திருக்கிறோம் என்பதையும். அத்தியாவசியமான தேவைகளுக்குக்கூட நாம் பிறரை எதிர்பார்க்கிறோம் என்பதையும் உணர்கிறோம். இவ்வாறு பிணி, வாழ்க்கையின் பிரத்தியட்ச உண்மைகளைக் காணும்படி நம் கண்களைத் திறந்து வைக்கின்றது. அது மறைமுகமான ஒரு நன்மையாகும். - எச் பல்லோ[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 248. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.