உள்ளடக்கத்துக்குச் செல்

பகைவர்

விக்கிமேற்கோள் இலிருந்து

பகைவர் அல்லது எதிரி என்பது தங்களுக்கு எதிராக அல்லது அச்சுறுத்தலாகக் கருதப்படுபவர்களை குறிப்பிடும் சொல்லாகும், இந்தச் சொல் பொதுவாக போர்ச் சூழலில் மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  • ஒரு பகைவனை வெல்வதைக்காட்டிலும் அவனைத் திருப்புவது மேல். வெற்றி அவனுடைய விடத்தைப் போக்கலாம். ஆனால் அவனைத் திருத்தி வசப்படுத்திக்கொள்வதில், அவனுடைய உள்ள உறுதியே போய்விடும். -ஃபெல்ட்ஹாம்[1]
  • உன் எதிரிகளைக் கவனி. அவர்களே உன் குறைகளை முதலில் கண்டிப்பவர்கள். - ஆன்டிஸ்கினிஸ்[1]
  • நாம் சந்தேகிக்காத எதிரியே மிகவும் அபாயகரமானவன். - ரோஜாஸ்[1]
  • நம்மைவிட நம் எதிரிகள் பெற்றுள்ள அதிக நல்ல குணங்களை நாம் கவனித்து வரவேண்டும். குறைகளை நீக்கிக்கொண்டு. அவர்களுடைய நல்ல குணங்களை நாம் அவர்களிலும் அதிகமாகப் பெறவேண்டும். - புளுடார்க்[1]
  • அறிஞரே! உமது பகைவர்களுடன் உறவாடிக்கொண்டிருக்கும் அந்த நண்பரைக் கை கழுவிவிடும். - ஸாஅதி[1]

பழமொழிகள்

[தொகு]
  • உனக்கு ஐம்பது நண்பர்கள் இருக்கிறார்களா? அவர்கள் போதமாட்டார்கள் உனக்கு ஒரு பகைவன் இருக்கிறானா? அவனே அதிகம்! -இத்தாலியப் பழமொழி[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 249-250. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பகைவர்&oldid=22029" இலிருந்து மீள்விக்கப்பட்டது