பஞ்சு அருணாசலம்

விக்கிமேற்கோள் இலிருந்து

பஞ்சு அருணாசலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  • எல்லா கதைகளும் நல்ல கதைகள்தான். அதை சினிமாவுக்கான மொழியில் சொல்வதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது.[1]
  • நாம் ஒரு முடிவு எடுத்தப்பிறகு பெரியவர்கள் என்ன சொன்னாலும், அது நம்மை சமாதானப்படுத்துவதற்காகச் சொல்கிறார்கள் என்றே நமக்கு தோன்றும்.[2]
  • வெண்பாவுக்கான இலக்கணம் நுணுக்கமானது; கடினமானது. வெண்பாவில் சிறிய தவறு இருந்தால்கூட, அதை புலமைக்கு இழுக்காக பார்ப்பார்கள்.[2]
  • சகுனம் பார்ப்பது எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் பாதியில் நின்று போயிருக்கின்றன. அதனால் நான் எப்போதும் திறமையை மட்டுமே நம்புவேன்.[3]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. பஞ்சு அருணாச்சலம் (ஏப்ரல் 6 2016). "திரைத்தொண்டர்". ஆனந்த விகடன்: 106-108. 
  2. 2.0 2.1 பஞ்சு அருணாசலம் (20 ஏப்ரல் 2016). திரைத்தொண்டர். ஆனந்தவிகடன். pp. 76-78. 
  3. பஞ்சு அருணாச்சலம் (சூன் 22 2016). "திரைத்தொண்டர்". ஆனந்த விகடன்: 68. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=பஞ்சு_அருணாசலம்&oldid=14466" இலிருந்து மீள்விக்கப்பட்டது