பணி ஓய்வு

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

பணி ஓய்வு (Retirement from Service) என்பது குறிப்பிட்ட வயது எய்திய ஊழியரை, அவர் செய்யும் பணியிலிருந்து பணி வழங்குபவர் முற்றிலுமாக விடுவிப்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • பெருஞ்சாலையை விட்டு விலகி, காப்புள்ள ஓரிடத்தில் போய்த் தங்கியிரு. ஏனெனில், சாலையருகிலுள்ள மரத்தில் காய் காய்த்தால், அது கனியும்வரை இராது. - கிரிஸோஸ்டம்[1]
  • ஓய்வெடுத்துக்கொண்டு ஒதுங்குவதை நன்கு அனுபவிப்பதற்கு, அடிப்படையான நல்ல உலகியல் அறிவும், படிப்பில் ஆர்வமும் வேண்டும் அப்பொழுதுதான் ஓய்வின் இனிமை தெரியும். - டிரைடன்[1]
  • உலகம் நீ ஒய்வெடுத்துக்கொண்டு ஒதுங்குவதற்காக வருந்தும்வரை ஒதுங்க நினைக்காதே. செருக்கினாலோ, கோழைத்தனத்தாலோ, சோம்பலினாலோ ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் மனிதன், அங்கே வெறுமே உட்கார்ந்து, உறுமிக்கொண்டிருப்பதை நான் வெறுக்கிறேன். நான் செய்வதைப் போல வெளியே வரட்டும். வந்து குரைக்கட்டும். - ஜான்ஸன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 144. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பணி_ஓய்வு&oldid=20695" இருந்து மீள்விக்கப்பட்டது