உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Sriveenkat/மணல்தொட்டி

விக்கிமேற்கோள் இலிருந்து

பஹல்காம் தாக்குதல்: உலகத் தலைவர்கள் கூறியது

[தொகு]
  • இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். - நரேந்திர மோதி
  • ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் பலியான அப்பாவிகளின் இழப்புக்கு டிரம்ப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்... இந்த கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு முழு ஆதரவை தெரிவித்தார். - டொனால்ட் டிரம்ப்
  • பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா வலுவாக நிற்கிறது. உயிரிழந்தவர்கள் ஆத்மாவுக்காகவும் காயமடைந்தவர்கள் குணமடையவும் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோதி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களின் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபமும் உள்ளது. - டொனால்ட் டிரம்ப்
  • இந்த கொடூரமான குற்றத்தை நியாயப்படுத்த முடியாது... இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தத் தயாராக உள்ளோம். - விளாடிமிர் புதின்
  • பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலால் நான் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்களின் நினைவுகளும் பிரார்த்தனையும் இருக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேல் துணை நிற்கிறது. - பெஞ்சமின் நெதன்யாகு
  • பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நானும் உஷாவும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்... இந்த கொடூரமான தாக்குதலால் அவர்கள் வேதனை அடைந்திருக்கும் இந்த வேளையில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன. - w:துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
  • (சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்) இந்த கொடூரமான தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். - முகமது பின் சல்மான்
  • இந்திய அரசுக்கும் இந்த கொடூரமான தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். (இந்த தாக்குதலை குற்றச்செயல் என கண்டித்துள்ளது.) - ஐக்கிய அரபு அமீரகம் வெளியுறவு அமைச்சகம்
  • பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்... இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும், குறிப்பாக இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். - ஈரானிய தூதரகம் (இந்தியா)
"https://ta.wikiquote.org/w/index.php?title=பயனர்:Sriveenkat/மணல்தொட்டி&oldid=38433" இலிருந்து மீள்விக்கப்பட்டது