பயிற்சி
Jump to navigation
Jump to search
பயிற்சி என்பது தொழில் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்க ஏற்கனவே அத்தொழிலில் திறன் பெற்றவர்களால் வழங்கப்படும் தகவல் அல்லது திறன் பரிமாற்றம் ஆகும். பயிற்சி வழங்கப்படுவதற்கும் பயிற்சி பெறுவதற்கும் குறிப்பிட்ட நோக்கம் இருக்கும்.
மேற்கோள்கள்[தொகு]
- அறிவுப் பயிற்சியின் முதன்மையான நோக்கம் மனிதனுக்கு நிறைந்த அறிவையளிப்பதும், அவன் மனத்தைப் பூரணமாக அடக்கிக்கொள்ளும் ஆற்றலை வளர்ப்பதுமாகும். - நோவாலிஸ்[1]
- அரைகுறைப் பயிற்சி ஆடம்பரத்தை உண்டாக்கும்: தீவிரப் பயிற்சி எளிய வாழ்வை உண்டாக்கும். போவீ[1]
- சாதாரண அறிவுள்ள ஒரு மனிதன் பயிற்சியினாலும் கவனத்தினாலும் உழைப்பினாலும் தான் விரும்புவது போன்ற எந்த நிலையையும் அடைய முடியும். ஆனால், கவிஞனாவது மட்டும் வேறு கலையாகும். - செஸ்டர்ஃபீல்டு[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 255-256. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.