பராக் ஒபாமா

விக்கிமேற்கோள் இலிருந்து
நான் இந்த இலக்கை எட்டுவேன்; குறிக்கோளை வெல்வேன்; வழியில் எந்த இடறும், தடையும் நேரினும் தகர்ப்பேன்; ஆயிரமாயிரமாய் இன்னல்கள் தாக்கினும், என் நம்பிக்கையை இழக்க மாட்டேன். அந்த நம்பிக்கை ஆம்; நம்மால் முடியும் என்பதே!

பராக் உசேன் ஒபாமா (Barack Hussein Obama), ஐக்கிய அமெரிக்காவின் 44 ஆவது மற்றும் தற்போதைய குடியரசுத் தலைவர். 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார். அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  • உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.
  • இங்கே கறுப்பு அமெரிக்கா, வெள்ளை அமெரிக்கா, ஆசிய அமெரிக்கா, கிறிஸ்துவ அமெரிக்கா என்றெல்லாம் எதுவும் இல்லை. இங்கே இருப்பது எல்லாம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காதான்!.
  • நான் போரை எதிர்ப்பவன் அல்ல; ஆனால், ஊமையான, மடத்தனமான போர்களை எதிர்க்கிறேன்!
  • இது என்னுடைய வெற்றி அல்ல; அமெரிக்க மக்களின் வெற்றி!
  • நான் போட்டியிட முனைந்தபோது, பணம் இல்லை. பெரிய நிறுவனங்களின் ஆதரவு இல்லை. வாஷிங்டன் நகரின் பெரிய அரங்கங்களில், நம் பிரச்சாரம் தொடங்கவில்லை. இது வசதி அற்ற மக்கள் வசிக்கின்ற வீதிகளின் முற்றவெளிகளில் தொடங்கப்பட்டது. வாழ்க்கையோடு போராடும் ஆண்களும், பெண்களும், அவர்கள் ஈட்டுகின்ற குறைந்த ஊதியத்தில் இருந்து, 5 டாலர்,10டாலர், 20 டாலர் என்று கொடுத்த நிதியில் வளர்ந்தது.
  • நம்முடைய பிள்ளைகளின் பிள்ளைகள் சொல்லட்டும். சோதனைகள் முற்றுகை இட்டதால், நம் பயணத்தை நிறுத்தவில்லை. நாம் புறமுதுகிடவில்லை, இடறவில்லை. அகன்ற வெளியில், குறிக்கோளை நோக்கியே நடந்தோம்.
  • இறைவனின் கருணையோடு, நாம் சுதந்திரம் எனும் மகத்தான பரிசினை, அந்த விருதை, பத்திரமாக இளந்தலைமுறையினரின் கைகளில் நாம் சேர்த்தோம் என்றே நம் வருங்காலத் தலைமுறையினர் கூறட்டும்.
  • நம்மைத் தாக்க நினைக்கும் பயங்கரவாத சக்திகளுக்குச் சொல்வோம்: எங்கள் உறுதியும், உணர்ச்சியும் வலிமை வாய்ந்தது. அதை நீங்கள் உடைக்க முடியாது. எங்களை முறியடிக்க இயலாது. நாங்கள் தோற்கடிப்போம்.
  • ஏமாற்றுக் கலையாலும், கருத்து உரிமையின் குரலை நெரிப்பதாலும், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு இருப்பவர்களுக்குச் சொல்வேன், வரலாற்றின் தவறான பக்கத்தில் நிற்கிறீர்கள். உங்கள் கைகள், எதேச்சதிகாரப் பிடியை உதறிவிட்டு நீளுமானால், அதை நாங்கள் பற்றுவோம்.
  • இந்த நாட்டில், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் கைகோர்த்து வாழ, உறுதி அளிக்கிறோம்.
  • அமைதியும்-கண்ணியமும் நிறைந்த எதிர்காலத்தைத் தேடுகிற ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் அமெரிக்கா நண்பனாகவே திகழும் வளமான வாழ்வுக்கு முன்னெடுத்துச் செல்ல நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்.
  • நான் இந்த இலக்கை எட்டுவேன்; குறிக்கோளை வெல்வேன்; வழியில் எந்த இடறும், தடையும் நேரினும் தகர்ப்பேன்; ஆயிரமாயிரமாய் இன்னல்கள் தாக்கினும், என் நம்பிக்கையை இழக்க மாட்டேன்.
ஆம்; நம்மால் முடியும் என்பதே அந்த நம்பிக்கை!
  • உலகப் பொருளாதார மந்த நிலையைப் போக்க நான் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் 100 சதவிகிதம் சரியானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நாம் செய்வது சரியா, தவறா என்ப தைக் காலம்தான் தீர்மானிக்கும்!

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பராக்_ஒபாமா&oldid=13874" இலிருந்து மீள்விக்கப்பட்டது