ஹிஜாப்
Appearance
(பர்தா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பர்தா அல்லது என்பது தென்னாசியாவைச் சேர்ந்த சில சமுதாயங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில சமய, சமூக நடைமுறைகளுக்கு இணங்க அணிய வேண்டிய ஆடையின் ஒரு பகுதி அல்லது பெண்களின் தனிமையைக் காப்பதற்கான ஒன்று. பர்தா என்னும் சொல் பாரசீக மொழியில் "திரை" எனப் பொருள்படும். தமிழில் இதை "முக்காடு" என்பர். பொதுவாக இசுலாம் சமயத்தைச் சேர்ந்த பெண்கள் இதை அணிகிறார்கள். இதில் ஹிஜாப் என்ற வகையும் உண்டு.
மேற்கோள்கள்
[தொகு]- நவீன கல்வி முறை எந்த விதத்திலும் இசுலாமியச் சமூகத்தை முன்னேற்றவில்லை. பதிலாக பர்தா அணிவது போன்ற பிற்போக்கான நடவடிக்கைகளை நம் சமூகத்தில் படித்த பெண்களே தொடர்வதற்குத்தான் அது வழி செய்திருக்கிறது. -சாரா அபூபக்கர்
- பர்தா முறை என்பது முந்தைய யுகத்தின் காட்டுமிராண்டித்தனமான எச்சம். பல இடங்களில் மதத்தின் பெயரால் பெண்கள் பர்தா முறையைக் கடைபிடிக்குமாறு கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். - ஜவகர்லால் நேரு
- (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், (2010). ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள். புதுதில்லி: நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா,. pp. 83-91. ISBN ISBN 978-81-237-3332-6.