பல்கேரியா பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் பல்கேரியா பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • அழகான மனைவியும் அருமையான பழைய மதுவும் இருந்தால், நண்பர்கள் பலர் வருவார்கள்.
  • உன் குழந்தைகள் தீயோராயிருந்தால், நீ அவர்களுக்குச் சொத்து வைக்க வேண்டாம்; அவர்கள் நல்லோராயிருந்தால், உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை.
  • உன் வீடு-உனது ராஜ்யம்.
  • என் முதல் மனைவி மனைவியா யிருந்தாள்; இரண்டாமவள் என் யசமானியா யிருந்தாள்; மூன்றாமவளை நான் சிலுவை போல் வைத்துக் கும்பிடுகிறேன்.
  • ஒருவன் சகோதரனைத் தேடிக் கடல் வரை போவான்;. காதலியைத் தேடிக் கடலுக்குள்ளேயும் போவான்.
  • ஒன்று இளமையிலேயே திருமணம் செய்து கொள் , அல்லது துறவியாகி விடு.
  • கடவுள் ஒவ்வொரு பிணிக்கும் ஒரு பச்சிலை அளித்திருக்கிறார்.
  • காதல் ஒன்றுதான் பங்காளிகளை அனுமதிக்காது.
  • செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள். (மேலை நாடுகளில் கம்பள நூல் நூற்றல் கன்னியர் செய்யவேண்டிய தொழிலாக இருந்தது.)
  • தந்தைதான் வீட்டுக்கு விருந்தாளி.
  • நீ வெளியில் எங்கே சுற்றினாலும், இன்பமயமான உன் வீட்டுக்கு வந்துவிடு.
  • நீண்ட தலைக்காரிக்கு ஆழமில்லாத உள்ளம்.
  • நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளி துருக்கியனை விட மோசமானவன்.
  • பானையாக உருண்டு சென்று மூடியை கண்டுபிடிக்கும்.
    (திருமணத்திற்கு ஜோடி சேரும்.)
  • பிறப்பில் அழுகிறோம், இறப்பில் ஏன் என்பதைக் காண்கிறோம்.
  • பெண் இல்லாத வீடு வாளியில்லாத கிணறு.
  • பெண் இல்லை யென்றால், வீடில்லை.
  • மரணம் உண்மையே பேசும்.
  • மரணமில்லாவிட்டால், வாழ்க்கை அற்புதமானதுதான்.
  • முதியோரை மதித்தல் ஆண்டவனை மதிப்பதாகும்.
  • மூக்கின்மேல் பரு வந்தால் அது ஆளை மறைத்துவிட்டுத் தானே முன்னால் தெரியும்.
  • வாழ்க்கை வேண்டுமானால், நாட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
  • வாழவேண்டியவனுக்கு மருந்துக்குப் பஞ்சமில்லை.
  • வெறும் கையோடு வீடு திரும்பினால், உன்னை வீட்டுக்கு உடையவனாக. எண்ணிக் கொள்ள வேண்டாம்.
    [வீட்டில் அனைவரும் அலட்சியமாக எண்ணுவர்.]
"https://ta.wikiquote.org/w/index.php?title=பல்கேரியா_பழமொழிகள்&oldid=38028" இலிருந்து மீள்விக்கப்பட்டது