பாட்ஷா (திரைப்படம்)
பாட்ஷா 1995ல் வெளிவந்த ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், மற்றும் பலரும் நடித்துள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் "மாணிக்கம்" என்ற முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்த ஆட்டோ காரனாக நடித்தார்.
மாணிக் பாட்ஷா/மாணிக்கம்
[தொகு]- நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்னா மாதிரி
- நான் இத கேட்டு வேலை செய்யல (தலையை தட்டிக்கொள்கிறார்), இத இத இத கேட்டு வேலை செய்றேன் (மார்பை தட்டிக்கொள்கிறார்)
- நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய கொடுப்பான், ஆனா கை விட்ருவான்.
வசனங்கள்
[தொகு]மார்க் ஆண்டனி: என்ன மாணிக், நல்ல இருக்கியா?
மாணிக் பாட்ஷா: பாட்ஷா, மாணிக் பாட்ஷா!
மார்க் ஆண்டனி: ஆ, எஸ், எஸ், எஸ்! மாணிக் பாட்ஷா. என்ன விஷயம் தம்பி? என் கிட்ட எதோ பேசணும்னு சொன்னியாமே! ஏதாவது உதவி தேவையா?சொல்லு என்னவேனா செய்றேன். நீ நம்ம ரங்கசாமி புள்ளையாச்சே. சொல்லு..
மாணிக் பாட்ஷா: ஹே ஹே ஹே ஹே! இத பாரு. எனக்கும் உனக்கும் தான் சண்ட. இந்த பாட்ஷாக்கும் ஆண்டனிக்கும் தான் சண்ட. இதுல நீ சாகனும், இல்ல நான் சாகனும். உன்னுடைய ஆளுங்க சாகனும், இல்ல என்னுடைய ஆளுங்க சாகனும். பொதுமக்கள் இல்ல. அப்பாவி மக்கள் இல்ல. இப்போ தெரிஞ்சுப்போச்சு , நீ ஒரு கோழை. ஒரு கோழை கூட சண்டப் போடறது எனக்கு பிடிக்காது. இந்த பாட்ஷா மாணிக் பாட்ஷாக்கு பிடிக்காது. முடிச்சுடறேன், முடிச்சிடறேன், எண்ணி ஏழே நாளுக்குள்ள உன் கதையே முடிச்சிடறேன்.
ரங்கசாமி: டேய் ! யாருக்கிட்ட என்ன பேசிகிட்டு இருக்கனு தெரியுமா?
மாணிக் பாட்ஷா: தெரியும்ப்பா . ஒரு அயோக்கியன் கிட்ட உண்மையே பேசிகிட்டு இருக்கேன்.
ரங்கசாமி: டேய் !
மார்க் ஆண்டனி: ஆ ஆ ஆ ஆ ! சின்ன புள்ள. அப்பா மாணிக் பாட்ஷா, நீ இந்த தொழிலுக்கு புதுசு. குழந்தை! என்ன சொன்ன, ஏழு நாள்ல என்ன முடிக்கிறியா? எண்ணி ஏழே செகண்டுக்குள்ள உன்ன நான் முடிக்கிறேன். புரியலையா?கொஞ்சம் பாரு.
ஒரு பக்கம் பாட்ஷாவை கொல்ல துப்பாக்கி ஏந்திய ஆண்டனியின் ஆட்கள் நிற்கின்றனர்
மாணிக் பாட்ஷா: கொஞ்சம் அங்கே பாரு கண்ணா.
மற்றொரு பக்கத்தில் ஆண்டனியை கொல்ல துப்பாக்கி ஏந்திய பாட்ஷாவின் ஆட்கள் நிற்கின்றனர்
மாணிக் பாட்ஷா: ஹா ஹா ஹா ஹா! பாட்ஷா, மாணிக் பாட்ஷா! ஹே ஹே ஹே.. ஒன்னு சொல்றேன். நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய கொடுப்பான், ஆனா கை விட்ருவான்.