உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிராஜா

விக்கிமேற்கோள் இலிருந்து

பாரதிராஜா (பிறப்பு: சூலை 17, 1941), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.

மேற்கோள்கள்

[தொகு]

நபர் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
  • "வயசு தடுக்குது - இல்லேன்னா, இவர் திறமைக்கு அவர் காலில் விழுந்திருப்பேன்" - புதிய வார்ப்புகள் படத்தின் வெற்றி விழாவில் கைலாசம் பாலசந்தர் கூறியது. [1]
  • "இந்த பாரதிராஜா வித்யாசமானவன்பா...! கையை வீசி நடங்கறான். வெறுங்கால்ல வேட்டியை மடிச்சுக் கட்டிட்டு போங்கறான்! என்ன பேசன்னு கேட்டா - எதுவுமே பேச வேண்டாங்குறான். என்னடா பண்றான் இவன்னு குழம்பிப்போய் படம் பாத்தா, மெரட்டிருக்காம்பா" - அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் நீளமான வசனங்களை பேசி நடித்து பழகிய சிவாஜி கணேசன் பாரதிராஜா அவர்களின் படபிடிப்பு முறைப்பற்றி முதல் மரியாதை படத்தின் அனுபவத்திலிருந்து குறிப்பிட்டது.[1]
  • அதுவரை ஸ்டுடியோக்களுக்குள் இருந்த தமிழ் சினிமாவை உண்மையான கிராமங்களை நோக்கி திசைதிருப்பியவர் இயக்குநர் பாரதிராஜா. இன்றுவரை தமிழில் வெளியாகியுள்ள கிராமிய அழகு சார்ந்த திரைப்படங்களுக்கு அவரே பிதாமகர். பாரதிராஜா என்ற பெருங்கலைஞனின் மூலம் தமிழ் சினிமா தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டது. -எஸ். ராமகிருஷ்ணன்[2]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாரதிராஜா&oldid=20122" இலிருந்து மீள்விக்கப்பட்டது