உள்ளடக்கத்துக்குச் செல்

பாவனை

விக்கிமேற்கோள் இலிருந்து

பாவனை அல்லது பாசாங்குத்தனம் என்பது ஒருவரிடம் உண்மையில் இல்லாத நல்லொழுக்கங்கள், தார்மீக அல்லது சமய நம்பிக்கைகள், கொள்கைகள் போன்றவற்றைக் கொண்டிருப்பதாக நடிப்பது.

  • போலியான பணிவு அகங்காரமாகும். போலியான பெருமை கீழ்த்தரமான நடத்தையாகும். போலியான புகழ் கட்டற்ற வாழ்வாகும். போலியான ஒழுக்கம் கபடமாகும். போலியான அறிவு நடித்து ஏய்ப்பதாகும். - புளுயெர்[1]
  • ஒரு மனிதனிடம் யோக்கியதை எவ்வளவு அதிகமாயுளதோ, அந்த அளவுக்கு அவன் ஒரு ஞானியைப்போல நடிக்கமாட்டான். - லவேட்டர்[1]
  • குணமோ, அந்தஸ்தோ உயர உயர பாவனை செய்தல் குறைந்து வரும். ஏனெனில், அப்பொழுது பாவனை செய்ய வேண்டிய அவசியம் குறைவு. - புல்வர்[1]
  • உண்மையான பெருமை வேரூன்றி வளர்ந்துவிடும்: அப்பொழுது பாவனைகள். வாடிய மலர்களைப் போல உதிர்ந்து விடும். போலிகள் நீடித்து நிற்கமாட்டா. - எலிபெரோ[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 266. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாவனை&oldid=33636" இலிருந்து மீள்விக்கப்பட்டது