பிடிவாதம்

விக்கிமேற்கோள் இலிருந்து

பிடிவாதம் குறித்த மேற்கோள்கள்

  • பிடிவாதமுள்ள மனிதன் அபிப்பிராயங்களைக் கொண்டிருப்ப தில்லை. ஆனால், அவைகளே அவனைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன; ஏனென்றால், ஒரு தவறு அவனைப் பிடித்துக்கொண்டால். அதைப் பிசாசைப் போல் மிகவும் பிரயாசைப்பட்டுத்தான் விரட்ட வேண்டியிருக்கும். - பட்லர்[1]
  • சிலரே. மிகச்சிலரே தங்கள் தவறுதலை ஒப்புக்கொள்வர். - ஸ்விஃப்ட்[1]
  • படிப்பில்லாத அற்பமான மனிதனுக்குப் பிடிவாதமும், வழக்குப் பேசுதலும் பொதுவான குணங்கள். அவனுக்கே அவை பொருத்தமானவை.[1]
  • தவறு கூடுதலாயிருந்தால், பிடிவாதமும் அதிகமாயிருக்கும். - திருமதி நெக்கெர்[1]
  • பிடிவாதமும், விவாதத்தில் காரமும் தவற்றுக்குச் சிறந்த அத்தாட்சிகள். கழுதையைப் போல் பிடிவாதமுள்ள வெறுக்கத் தகுந்த பிராணி வேறு என்ன இருக்கின்றது? - மாண்டெயின்[1]
  • பிடிவாதம் பலவீனருடைய வலிமையாகும். தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு, உண்மையையும். நியாயத்தையும் சட்டத்தையும், ஒழுங்கையும். கடமையையும், தாராளத்தையும் அடிப்படையாகக் கொண்டு உறுதியாயிருந்தால் ஞானிகளின் பிடிவாதமாகும். - லவேட்டர்[1]
  • பிடிவாதமும் முரண்பாடும் காகிதக் காற்றாடிகளைப் போன்றவை: அவைகளை இழுத்துவிட்டுக்கொண்டிருக்கும் வரைதான் அவை உயரே இருக்கும்.[1]
  • மற்றவர்களுடைய அபிப்பிராயங்களிலிருந்து மிகவும் மாறுபட்டிருப்பவர்கள் தங்கள் அபிப்பிராயங்களே உண்மையானவை என்று நம்பிக்கொண்டிருப்பர். - மகின்டோஷ்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 266-267. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிடிவாதம்&oldid=33907" இலிருந்து மீள்விக்கப்பட்டது