உள்ளடக்கத்துக்குச் செல்

பிணறாயி விஜயன்

விக்கிமேற்கோள் இலிருந்து

பிணறாயி விஜயன் (Pinarayi Vijayan, மலையாளம்: പിണറായി വിജയൻ, பிறப்பு: 24 மே 1944) இந்திய அரசியல்வாதியும், கேரள மாநிலத்தின் முதலமைச்சரும் ஆவார். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

 • குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது சமத்துவத்தின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் சமூகத்திலுள்ள பல்வேறு மக்களுக்கும் கவலையை அளித்துள்ளது. [1]
 • திருமணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் வியாபார ஒப்பந்தமாகத் தரம்தாழ்த்தக் கூடாது. [2]
 • துருவமுனைப்பைத் தூண்டும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை ஒளிபரப்ப தூர்தர்சன் எடுத்த முடிவு கடும் கண்டனத்துக்குரியது. தேசிய செய்தி ஒலிபரப்பு பாஜக-ஆர்எசுஎசு ஒருங்கிணையின் பிரச்சார இயந்திரமாக மாறக்கூடாது, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த முயலும் திரைப்படத்தை திரையிடுவதில் இருந்து விலக வேண்டும். வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை எதிர்ப்பதில் கேரளா உறுதியாக இருக்கும்.[3]
 • நமது பலத்தீன் சகோதரர்கள் வேதனையில் உள்ளனர். அமெரிக்காவின் ஆதரவுடன், இசுரேல் பாலஸ்தீனத்தை குறிவைத்து அதன் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்து வருகிறது. அவர்களின் நிலம் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் நடுநிலையான நிலைப்பாட்டை எங்களால் எடுக்க முடியாது. பலத்தீன் மக்களுக்கு நமது ஏகோபித்த ஆதரவை தெரிவிக்க வேண்டும். [4]
 • சிஏஏ சட்டத்தை அகற்றுவோம் என எங்கள் சி. பி. ஐ (எம்) கட்சியின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் உறுதி அளித்திருக்கிறோம். சிஏஏ மட்டுமல்லாது, பணமோசடி தடுப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் போன்ற கொடூர சட்டங்களையும் அகற்றுவதற்கான வாக்குறுதியை அளித்துள்ளோம். சிஏஏ சமூகத்தை பிளவுபடுத்துகிறது, இது நமது நாட்டின் இசுலாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், காங்கிரசும் அதன் தலைமையும் சிஏஏ குறித்து கள்ள மௌனம் காத்து வருகின்றன. அதன் காரணமாகவே, அதன் தேர்தல் அறிக்கையில் சிஏஏவை ரத்து செய்வதாக உறுதியளிக்கப்படவில்லை.[5][6]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

 • கேரள முதல்வர் சிறீ பிணறாயி விஜயன் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கட்டும். — நரேந்திர மோதி [7]
 • கடந்த காலங்களில் நான் எழுப்பிய ஒவ்வொரு பிரச்சினையும் பிணறாயி விஜயனை தனது முடிவை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிணறாயி விஜயன் ஊழல் மிகுந்த கம்யூனிஸ்ட் முதல்வராக நினைவுகூரப்படுவார். முதலில் ஆலோசனை நிறுவனத்தில் நுழைந்து அதை ஒப்பந்தமாக மாற்றுவதில் அவர் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும். (எஸ்.என்.சி லாவலின் வழக்கு, 1997ல் மின்துறை அமைச்சராக இருந்த விஜயனால் மை வைக்கப்பட்டது). — ரமேசு சென்னிதலா [8]
 • நாட்டில் இரண்டு முதல்வர்கள் சிறையில் இருக்கிறார்கள். கேரள முதல்வர் பிணறாயி விஜயனுக்கு மட்டும் அது நடக்காதது ஏன்? நான் 24 மணி நேரமும் பாஜகவை தாக்கி கொண்டு இருக்கிறேன், ஆனால் பிணறாயி விஜயன் 24 மணி நேரமும் என்னை தாக்கி கொண்டு இருக்கிறார். இது சற்று குழப்பமாக இருக்கிறது. — இராகுல் காந்தி [9]

சான்றுகள்[தொகு]

 1. `ஒற்றுமையே இந்த கணத்தின் தேவை!' - 11 மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதிய பினராயி விஜயன் #CAA. விகடன் (03 சனவரி 2020). Retrieved on 28 ஏப்ரல் 2024.
 2. `திருமணத்தை வியாபார ஒப்பந்தமாகத் தரம் தாழ்த்தாதீர்கள்!' - இளம்பெண்ணின் மரணம் குறித்து பினராயி விஜயன். விகடன் (23 சூன் 2021). Retrieved on 28 ஏப்ரல் 2024.
 3. எக்ஸ், ஏப்ரல் 4, 2024.
 4. `இன அழிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல்; பாலஸ்தீனத்துக்கு நமது ஆதரவை வழங்க வேண்டும்!' - பினராயி விஜயன் (08 நவம்பர் 2023). Retrieved on 28 ஏப்ரல் 2024.
 5. ‘Congress stand aligns with Sangh Parivar’: Kerala CM Pinarayi Vijayan slams INDIA ally (ஏப்ரல் 06, 2024). Retrieved on 28 ஏப்ரல் 2024.
 6. “சிஏஏ குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கள்ள மவுனம் காக்கிறது” - பினராயி விஜயன் கண்டனம். இந்து தமிழ் திசை (ஏப்ரல் 06, 2024). Retrieved on 28 ஏப்ரல் 2024.
 7. ‘Good health and a long life’: PM Modi, Arvind Kejriwal wish Kerala CM Pinarayi Vijayan on birthday (மே 24, 2020).
 8. Pinarayi Vijayan past master at scientific corruption: Ramesh Chennithala.
 9. 'ராகுல் காந்தி Vs பினராயி விஜயன்' - ஹாட்டான கேரளா அரசியல் களம்! (25 ஏப்ரல் 2024).

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிணறாயி_விஜயன்&oldid=38252" இலிருந்து மீள்விக்கப்பட்டது