பின்லந்து பழமொழிகள்
Appearance
இப்பக்கத்தில் பின்லந்து பழமொழிகள் தொகுப்பகட்டுள்ளன.
- ஏழை மனைவிக்கு எத்தனையோ இன்னல்கள் : அழுகின்ற குழந்தைகள், ஈர விறகு, ஓட்டைப் பானை, கோபமுள்ள கணவன்.
- ஏழை வீட்டில் பெண் எடு, செல்வர் வீட்டில் குதிரை வாங்கு.
- ஐந்துக்கு எழுந்திரு, ஒன்பதுக்கு உணவருந்து, ஐந்துக்குச் சாப்பிடு, ஒன்பதுக்கு உறங்கு.
- ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்க ஆணுக்குப் போதிய நேரம் இருக்கிறது.
- ஒருவனுக்கு உடல் நலம் குறைவு என்றால், எல்லாமும் குறைவு என்று பொருள்.
- காதல் என்பது மலர், கலியாணத்தில் அது கனியாகும்.
- காதல் நந்தவனம், கலியாணம் முட்புதர்.
- குழந்தையும் உதவிதான் செய்கிறது, ஒரு மீனைக் கழுவுவதற்குள், இரண்டு மீன்களைத் தின்னுகின்றது.
- பிறப்பைத் தப்ப முடியாதவன் இறப்பையும் தப்பமுடியாது.
- மனிதன் வேலை காரணமாக வெளியே போகிறான், பெண் தன்னைப் பிறர் பார்ப்பதற்காகப் போகிறாள்.
- மூடன் தன் குதிரையைப் புகழ்வான், பயித்தியக்காரன் தன் மருமகளைப் புகழ்வான், அறியாதவன் தன் மகளைப் புகழ்வான்.
- வீட்டு அம்மாளின் விருந்தாளி பாக்கியசாலி, வீட்டுக்காரனின் விருந்தாளி பாக்கியமற்றவன்.
- வெள்ளாட்டின் வெண்ணையும், பெண்டாட்டி சொத்தும் வீட்டுக்கு வேண்டாம்.