பிரான்ஸ் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பகத்தில் பிரான்ஸ் நாட்டு பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

  • ஆகக் கழிவான செருப்புக்கும் ஜோடி சேர்ந்துவிடும்.
  • அதிக உறவினர், அதிகத் துன்பம்.
  • ஆடவர்களால்தான் பெண்கள் தங்களுக்குள் ஒருவரை யொருவர் வெறுக்கின்றனர்.
  • இதயம் எவ்வளவு முதுமையோ, அவ்வளவே ஒருவனுடைய முதுமை.
  • இயன்ற பொழுதெல்லாம் பெண்கள் சிரிப்பார்கள், அழ வேண்டுமென்று தீர்மானித்து விட்டால், அழுவார்கள்.
  • இளைஞர்களைக் கேட்டுப் பாருங்கள்: அவர்களுக்கு எல்லாம் தெரியும்!
  • உறுதியான செருப்பு வேண்டுமானால், ஒரு பெண்ணின் நாவை அடித்தோலாக வைத்துத் தைக்க வேண்டும் அது ஒரு போதும் தேயாது.
  • ஊமையான மனைவி கணவனிடம் அடிபடுவதேயில்லை.
  • எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகியில்லை யென்று சொல்லியதில்லை.
  • ஒருவர் இளமையா யிருத்தல் ஒரு சமயம்தான்.
  • ஒருவருக்காக மற்றொருவர் உயிர் துறக்க முடியாது.
  • ஓநாயை அடக்கிவைக்க அதற்கு விவாகம் செய்து வை.
    [முரடனாயுள்ள மைந்தன், மனைவி வந்தால், அடங்கி விடுவான்.)
  • காதலுடனும் நெருப்புடனும் மனிதன் பழகிப் போகிறான்.
  • காதலும் பேராசையும் போட்டியைச் சகிக்கமாட்டா.
  • காதலைத் தடுத்தல் அதைத் தூண்டிவிடுவது போன்றது.
  • காதல் வந்து விட்டால், கழுதைகளும் நடனமாடும்.
  • குருடன் கொடி பிடித்துச் சென்றால், அவன் பின்னால் செல்பவர்களுக்கு ஆபத்துத்தான்.
  • குருடனும் சில சமயங்களில் தானியத்தைக் கண்டுபிடிக்கிறான்.
  • குழந்தைகளின் குற்றங்களை வெறுக்கும் தந்தையே அவர்களை நேசிப்பவன்.
  • சகோதரன் என்பவன் இயற்கையாக நமக்கு அளித்துள்ள நண்பன்.
  • சிறந்த வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், பழக்கம் அதை இன்பமாக்கும்.
  • சேவல் தன் குப்பை மேட்டிலிருந்தே கூவும்.
  • நல்ல மாப்பிள்ளை கிடைத்தவன் ஒரு மகனை அடைந்தவன்; தீய மாப்பிள்ளை கிடைத்தவன் தன் மகளை இழந்தவன்.
  • நாம் வருகிறோம், அழுகிறோம், இது தான் வாழ்க்கை ; நாம் அழுகிறோம், போகிறோம், இது தான் மரணம்.
  • நாற்பது வயது - இளமையின் முதுமை; ஐம்பது வயது முதுமையின் இளமை.
  • நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்று நாட்களே மனிதனின் நாட்கள்.
  • நொண்டி வரும்வரை நாமும் காத்திருக்க வேண்டும்.
  • நோயைக் காட்டிலும் வைத்தியருக்கு அஞ்ச வேண்டும்.
  • நோயை சொன்னால்தான், குணமாக மருந்து கிடைக்கும்.
  • பல மனிதர்கள் நோய்களால் மடிவதில்லை, தாம் உண்ட மருந்துகளாலேயே மடிகின்றனர்.
  • பாம்பு சாகும் பொழுதே அதன் விடமும் செத்துவிடும்.
  • புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும், மனிதர்களைப் படிக்க வேண்டியது அவசியம்.
  • பெண்கள், காடைகள், வேட்டை நாய்கள், ஆயுதங்கள் இவைகளில் ஓர் இன்பத்திற்காக ஆயிரம் வேதனைகள்.
  • பெண்டிர்க்கு நரகம் முதுமை.
  • பெருமையோடு ஒருத்தி ஒரு முறைதான் மனைவியா யிருக்க முடியும், ஒரு முறை தான் கைம்பெண்ணா யிருக்க முடியும்.
  • மனிதன், காற்றை (மட்டும்) உட்கொண்டு வாழ்ந்திருக்க முடியாது.
  • மனிதனின் பணப் பைக்காகவே பெண் படைக்கப் பெற்றிருக்கிறாள்.
  • மூன்று விலங்குகளே தம்மைச் சிங்காரித்துக் கொள்வதில் நேரத்தைக் கழிப்பவை- அவை பூனைகள், ஈக்கள், பெண்கள்.
  • வாலிபம் இடைவிடாத ஒரு வெறி, அது அறிவின்காய்ச்சல்.
  • வாழ்க்கை அபாயகரமான கடல் யாத்திரை.
  • வாழ்க்கை என்னவென்று நாம் தெரிந்து கொள்ளுமுன், பாதி வாழ்க்கை கழிந்து விடுகின்றது.
  • வாழ்க்கை ஒரு கோட்டை, அதைப்பற்றி நம் அனைவருக்கும் ஒன்றும் தெரியாது.
  • வாழ்க்கை ஒரு வெங்காயம், அதை உரிக்கும்பொழுது கண்ணீர் வரும்.
  • வாழ்க்கையில் திருப்தியை விட அதிருப்தியே அதிகம்.
  • வாழ்க்கையின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகின்றது; இரண்டாம் பகுதி முதற் பகுதிக்காக வருந்துவதில் கழிகின்றது.
  • விருந்து நடத்திக் கொள்ளக் காலம் இருக்கிறது.
  • விருந்து முடிந்த பிறகு மனிதன் தலையைச் சொறிகிறான்.
  • வீடில்லாத மனிதன் கூடில்லாத பறவை.
  • வைத்தியர்கள் மட்டும் பொய் சொல்ல அனுமதியுண்டு.
  • வைத்தியர் வந்தாலே, நோய் குணமாகத் தொடங்கிவிடும்.
  • வைத்தியருக்குக் கொடுப்பதை இறைச்சிக்காரனுக்குக் கொடு.
  • வைத்தியருக்குக் கொடுப்பதை ரொட்டிக்காரனுக்குக் கொடு.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரான்ஸ்_பழமொழிகள்&oldid=38017" இலிருந்து மீள்விக்கப்பட்டது