பிரீனேவின் பையாஸ்
Appearance
பையாஸ் (Bias, கி.மு. 6ஆம் நூற்றாண்டு) என்பவர் பண்டைய கிரேக்கத்தைச் சேர்ந்த ஞானி ஆவார். இவர் கிரேக்கத்தின் ஏழு ஞானிகளில் ஒருவராக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். மேலும் இவரது நன்னடத்தைக்காக புகழ் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- "அப்பாவி மனிதர்கள் எளிதில் ஏமாறுவார்கள்."
- "பெரும்பாலான மக்கள் தீயவர்கள்."
- "எல்லா மனிதர்களும் பொல்லாதவர்கள்."
- "துரதிர்ஷ்டத்தை பெருந்தன்மையுடன் தாங்குவது கடினம்."
- "நன்கு யோசித்து ஒன்றை நீங்கள் பின்பற்ற தேர்ந்தெடுங்கள்; ஆனால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்ட பிறகு, அதில் உறுதியுடன் விடாமுயற்சியுடன் இருங்கள்."
- "வேகமாக பேசாதே, அது முட்டாள்தனத்தை காட்டுகிறது."
- "அன்பே விவேகம்."
- "தகுதியற்ற மனிதனை அவனது செல்வத்தின் காரணமாகப் புகழாதே."
- "உங்கள் கருத்தை வற்புறுத்த அதன் மூலம் ஒன்றைப் பெறுங்கள், பலத்தால் அல்ல." / "வற்புறுத்தி கேட்டு எடுத்துக் கொள்ளுங்கள், வலுக்கட்டாயப்படுத்தி அல்ல."
- "அதிக வயது வரை வாழ்ந்திருப்பதனாலும் சரி, அல்லது விரைவிலேயே இறந்துபோவதானாலுஞ் சரி, எதற்கும் தயாராயிருக்கும்படியாக, மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்."[1]
- "எனது எல்லா விளைவுகளையும் என்னுடனே எடுத்துச் செல்கிறேன்."
- "உலகத்தில் துரதிருஷ்டமான மனிதன் யாரென்றால், துரதிருஷ்டத்தைச் சகித்துக் கொள்ளத் தெரியாதவன்தான்."[1]
- "இளமையிலிருந்துமுதுமைக்குச் செல்வதற்குச் சதனமாயமைந்த்துள்ளது ஞானம். ஆதலின் அதை ஜாக்கிரதையாக வைத்துக் காப்பாற்றுவாயாக! எல்லா உடமைகளைக் காட்டிலும் அதுதான்- ஞானந்தான்- மேலான உடமை."[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 வெ. சாமிநாத சர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 77-78.