பிரெடரிக் நீட்சே
Jump to navigation
Jump to search

பிரெடரிக் நீட்சே (1844 - 1900) என்பவர் புகழ்வாய்ந்த ஜெர்மானிய மெய்யியலாளர், கவிஞர், பண்பாட்டு விமர்சகர் ஆவார். இவர் மதம், கவிதை, தத்துவ எதிர்வாதம், விமர்சனம், அறிவியல், ஒழுக்கநெறி ஆகியவற்றில் படைப்புகளை செய்துள்ளார். இவரது எழுத்துக்கள் நவீன அறிவார்ந்த வரலாறு மற்றும் மேற்கத்திய மெய்யியலிலிலும், இருபதாம் நூற்றாண்டின் பல முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களிடமும் தாக்கம் செலுத்தியுள்ளது.
இவரது சிந்தனைகள் சில[1][தொகு]
- எப்போதும் அன்பில் சில பைத்தியக்காரத்தனம் உண்டு. ஆனால், அந்த பைத்தியக்காரத்தனத்திற்கான காரணமும் எப்போதும் உண்டு.
- ஒவ்வொரு உண்மையான மனிதனுக்குள்ளும் விளையாட்டில் விருப்பமுள்ள ஒரு குழந்தை மறைந்துள்ளது.
- நமது உணர்வுகளின் நிழல்களே எண்ணங்கள். அவை எப்போதும் இருண்ட, வெறுமையான மற்றும் எளிமையானதாக உள்ளன.
- இசை இல்லாமல், வாழ்க்கை தவறானதாகிவிடும்.
- உண்மைகள் என்று எதுவுமில்லை, விளக்கங்கள் மட்டுமே உள்ளன.
- பொய் என்பது வாழ்க்கையின் ஒரு நிபந்தனையாக உள்ளது.
- ஒரு எதிரிக்கு எதிரான சிறந்த ஆயுதம், மற்றொரு எதிரியே.
- கடந்த காலத்தைப் போலவே எதிர்காலமும் நிகழ்காலத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது.
- உங்களது ஆழ்ந்த தத்துவத்தில் உள்ளதைவிட, உங்கள் உடலில் அதிக ஞானம் உள்ளது.
- மன்னிப்பதற்கு ஏதாவது இருந்தால், அங்கே கண்டிப்பதற்கும் ஏதாவது ஒன்று இருக்கும்.
- ஏன் என்பது உங்களுக்கு தெரியுமானால், உங்களால் எப்படியாயினும் வாழ முடியும்.
- அனைத்து அழகிய கலை மற்றும் அனைத்து உயர்ந்த கலை ஆகியவற்றின் சாராம்சமாக நன்றி உள்ளது.
- காட்டு மிருகமாயிருக்கும் மனிதன் வீட்டு மிருகமாக ஆக்குவதே நாகரிகத்தின் பயன்.[2]
- இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது.[3]
- எந்த நூல், ஆக்கியோன் இரத்தத்தால் ஆக்கப் பட்டிருக்கிறதோ அந்த நூலே எனக்குப் பிரியம்.[4]
வெளி இணைப்புக்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [1] பிரெடரிக் நீட்சே தி இந்து 2016 சூலை 25
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம். நூல் 98- 99. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/இரத்தல். நூல் 148-149. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூலியற்றல். நூல் 174-176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.