பிளேக் நோய்
Appearance
பிளேக் (Plague) குடலிய நுண்ணுயிரி வகையான எர்சினியா பெசுட்டிசால் ஏற்படும் கொடிய நோய்த்தொற்று ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- நான் என் கண்களால் பார்த்தது போல் பார்த்திருந்தாலன்றி வேறு வழியாக இந்தியாவின் வறுமையைப் பற்றித் தெரியவராது. ஜனங்களின் மரணத்திற்கு பிளேக் ஒரு முக்கிய காரணம். இந்த வியாதியாலுண்டாகும் மரணத் தொகை மிக்கப் பரிதாபகரமானது. 1901-ம் வருடத்தில் 2 லட்சமும், 1902-ம் வருடத்தில் 8 லட்சமும், 1904-ம் வருடத்தில் 10லட்சமுமாக வருடாவருடம் லட்சக்கணக்கான இந்தியர்கள் மடிகின்றனர். பிளேக் வியாதியால் மாள்வதை இன்னும் தடுத்தபாடில்லை. பட்டினி கிடந்தே மக்கள் தங்கள் தேக வலிமையைக் ஒடுக்கிக் கொண்டனர். பட்டினி கிடப்பதைத் தடுக்காத வரையில் பிளேக் வியாதி தலையெடுத்து ஆடிக்கொண்டிருக்கும். இந்தியாவில் உண்டாகும் பஞ்சம் மழையில்லாமையினாலல்ல. ஐனப் பெருக்கத்தினாலும் அல்ல. மக்களின் பரிதாபகரமான வறுமையும் ஏழ்மையுமே காரணமாகும். — டாக்டர் சந்தர்லாந்து[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.