புன்னகை
புன்னகை என்பது வாயின் இரு முனைகளுக்கும் அருகிலுள்ள தசைகளை நெகிழ வைப்பதன் மூலம் உருவாகும் முகபாவனையாகும். கண்களைச் சுற்றிலும் புன்னகையைக் காணலாம். மனிதர்களிடையே, இது இன்பம், மகிழ்ச்சி, கேளிக்கைகளின் வெளிப்பாடு ஆகும், ஆனால் சிலசமயம் விருப்பமில்லாத தர்மசங்கடத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- சிரிக்க முடியாத முகம் நல்லதாயிருக்க முடியாது. - மார்ஷியல்[1]
- சிரிப்பு பகல்: அமைதி இரவு: புன்னகை அந்தி ஒளி. அது அவ்விரண்டுக்கும் நடுவே தவழ்ந்து, அவைகளைவிட மயக்கும் சக்தியுடையது. - பீச்செர்[1]
- அன்பு இன்பம், மகிழ்ச்சி ஆகியவற்றை அணிவது புன்னகை. அவை முகத்தின் சாளரத்தில் ஒளிரும் ஒளி. அதன் மூலம் ஒருத்தி தன் தந்தை கணவர் அல்லது நண்பருக்கு வரவு கூறி இன்புறுத்துகிறாள். - பீச்செர்[1]
- இயற்கையின் அழகுக்குக் கதிரொளிபோல, பெண்ணின் முகத்திற்கு அழகிய புன்னகை ஏற்றது. அது விகார முகத்திற்கும் அழகூட்டும். - லவேட்டர்[1]
- ஒருவர் புன்னகை புரியும் முறையைக்கொண்டு அவர் குணத்தைப்பற்றி ஏதாவது தெரிந்துகொள்ளலாம். சிலர் சிரிப்பதேயில்லை. ஆனால், இளிக்க மட்டும் செய்வார்கள். - போவீ[1]
- உரக்கச் சிரித்தல் சாதாரண மக்களின் மகிழ்ச்சியைக் காட்டுவது. அற்ப விஷயங்களிலேயே அவர்களுக்கு ஆனந்தம் வந்து விடும்; உலகம் தோன்றிய நாள் முதல் உண்மையான புத்தி சாதுரியமோ பெருந்தன்மையோ பெருஞ்சிரிப்பை உண்டாக்குவதில்லை. நாகரிகமுள்ள கனவான் புன்னகையே புரிகிறார். அவர் சிரிக்கும் ஒளியைக் கேட்கவே முடியாது. - செஸ்டர்ஃபீல்டு[1]