பூஜா ஹெக்டே

விக்கிமேற்கோள் இலிருந்து
பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டெ என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  • பெங்களூரு எனக்கு வீடு. கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த எனக்கு பெங்களூரில் உறவினர்கள் பலர் உள்ளனர். நான் பெங்களூர் ஒய்யார வாரத்திற்கு வருவேன். இது மிகவும் வேடிக்கையாக இருந்தது, நான் பல நல்ல நண்பர்களை உருவாக்கினேன்.[1]
  • நான் அண்மையில் ஒரு பத்திரிகையின் படப்பிடிப்புக்காக துருக்கியின் அண்டலியாவுக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து விடுமுறையில் இசுதான்புல்லுக்குச் சென்றேன், அது நான் சொந்தமாக முதன்முறையாக சுற்றுலா சென்றது. பயணம் செய்வதை ஒரு சிறந்த கற்றல் செயல்முறையாக நான் பார்க்கிறேன், எனது மிகப்பெரிய கனவு உலகம் முழுவதும் பயணம் செய்வதாகும்.[2]
  • நான் தென்னிந்தியத் திரைப்படத்துறையை நேசிக்கிறேன், அதன் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் அங்கிருந்து தொடங்கினேன், அவர்கள் வெளியாட்களையும், புதியவர்ளையும் மிகவும் வரவேற்கிறார்கள். என்னை நன்றாக நடத்துகின்றனர். எனது ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது, எல்லாவற்றையும் விட நான் படப்பிடிப்பை மிகவும் ரசிக்கிறேன்.[3]
  • எனக்கு சரளமாக தெலுங்கு பேசத் தெரியும், என்னுடைய வரிகளுக்கு நானே டப்பிங் செய்கிறேன். நான் தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்தவுடனே, என்னுடைய வரிகளுக்கு நானே டப்பிங் செய்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் மொழியைக் கற்க ஆரம்பித்தேன். இது எனது தொழிலை மதிக்க தேவை என்று உணர்ந்தேன். தெலுங்கு பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ள, அம்மொழியைப் பேசுவது மிகவும் அவசியம்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. "Bengaluru is home for me: Pooja Hegde" டெக்கன் ஹெரால்டு. சூலை 27, 2014)
  2. "Want to explore new place each year: Pooja Hegde" இந்தியன் எக்சுபிரசு. நவம்பர் 14, 2016)
  3. "Pooja Hegde: Southern industry very welcoming to outsiders, newcomers" தி ஸ்டேட்ஸ்மேன். செப்டம்பர் 28, 2017)
  4. "It is a really beautiful film, almost like a fairytale in its otherworldly look and feel” – Pooja Hegde on Radhe Shyam with Prabhas" Bollywood Hungama. அக்டோபர் 1, 2021)

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=பூஜா_ஹெக்டே&oldid=38208" இலிருந்து மீள்விக்கப்பட்டது