பெருஞ்சித்திரனார்
Appearance
தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 - சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.
மேற்கோள்கள்
[தொகு]- வீறுடைய செம்மொழி தமிழ்மொழி! உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி![1]
- கூறுபடும் மொழிகளைப் போல் புதையவில்லை கொஞ்சிப் பேசும் வழக்கற்றுக் குமையவில்லை சாறுபட்ட மரங்களைப்போல் சாயவில்லை தரங்கெட்ட மனிதர்களைப்போல் தாழவில்லை.[1]
- ஆண்டு நூறானாலும் அன்னைத் தமிழ்நாடு வேண்டும் - விடுதலை எண்ணம் விலக்கோம் யாம்![1]