போர்ச்சுக்கல் பழமொழிகள்
Appearance
இந்த பக்கத்தில் போர்ச்சுக்கல் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- அதிருஷ்டமுள்ளவனுக்கு முதற் குழந்தை பெண்ணாயிருக்கும்.
- இருவரைக் காதலிக்கும் ஒரு பெண் இருவரையும் ஏமாற்றுவாள்.
- உலகத்தைவிட்டு வெளியேறுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன; ஆனால் இங்கு வருவதற்கு ஒரே வழிதான் உண்டு.
- செல்வமுள்ள கைம்பெண் ஒரு கண்ணால் அழுவாள், ஒரு கண்ணால் சிரிப்பாள்.
- மூன்று சகோதரர்கள் மூன்று கோட்டைகள்.
- வைத்தியர்கள் அதிகமானால், நோய்கள் பெருகும்.