உள்ளடக்கத்துக்குச் செல்

போலந்து பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் போலந்து பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • அளவில்லாவிட்டால், மருந்தும் விஷமாகும்.
  • இறந்து போனவனின் 'உயில்' அவன் வாழ்க்கையின் கண்ணாடி. ['உயில்' என்பது மரண சாசனம்.]
  • ஒரு மதுக்கிண்ணமும் பெண்ணும் அருகிலிருந்தால், ஒருவனுக்குப் பொழுது போவது தெரியாது.
  • ஒருவன் மணந்து கொள்வது நல்லதுதான், ஆனால் மணமில்லாதிருப்பது அதைவிட நல்லது.
  • ஒவ்வோர் ஆதாமுக்கும் ஓர் ஏவாள் இருப்பாள்.
  • கன்னிப் பெண்ணிடம் உன் விருப்பம் போல் நடக்கலாம். விதவையிடம் அவள் விருப்பம் போலவே நீ நடக்க வேண்டும்.
  • காதல் முதலில் ஆடவனின் கண் வழியாகவும், பெண்ணின் காது வழியாகவும் நுழைகிறது.
  • காதைக் கொண்டு பெண்ணைப் பார், கண்ணைக் கொண்டு பார்க்க வேண்டாம்.
  • குடியானவனுடைய குழந்தைகள் அவன் செல்வங்கள் ; கனவானுடைய குழந்தைகள் அவன் கடன்கள்; பிரபுவின் குழந்தைகள் திருடர்கள்.
    [முற்காலத்தில் பிரபுக்கள் குடியானவர்களைத் துன்புறுத்தி, நில புலன்களைத் தாங்களே கைப்பற்றி வந்ததால், இப்பழமொழி அவர்களுக்கு எதிராக எழுந்த துவேஷத்தைக் காட்டுகின்றது.]
  • குடியானவன் தன் மனைவியை அடிக்காவிட்டால், அவளுடைய ஈரல் அழுகிப் போகும்.
  • கெட்ட பெண்ணிடம் அவளைப் புகழ்ந்து ஒரு வார்த்தை சொல்லு; நல்ல பெண்ணிடம் உன் விருப்பம் போல் பேசு.
  • சயித்தான் தான் சாதிக்க முடியாத வேலைக்கு ஒரு கிழவியை அனுப்புவான்.
  • தாய் தன் குழந்தையைத் தழுவினால், அநாதைக் குழந்தையை ஆண்டவர் தழுவிக் கொள்கிறார்.
  • திருமணம் செய்வதற்கு முன்பு மூன்று வருடம் இஷ்டம் போல் வாழ்க்கை நடத்திக்கொள்.
  • நம் உறவினர்கள் செழிப்பாயிருப்பார்களாக, நாம் அவர்களிடம் செல்லாமல் இருப்போமாக!
  • நூறு தெள்ளுப் பூச்சிகளைக் காத்துவிடலாம், ஒரு கன்னியைக் கட்டிக் காப்பது கஷ்டம்
  • நோயைக் கொன்றாலும், ஆளைக் கொன்றாலும், வைத்தியருக்கு 'ஃபீஸ்' உண்டு.
  • பிச்சைக்காரர்களுக்குள் அவ்வளவு துவேஷம் கிடையாது. வைத்தியர்களுக்குள்ளே அதிக வெறுப்பு உண்டு.
  • பிரமசாரியும் நாயும் எதையும் செய்யலாம்.
  • பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னால் அழுவாள் , ஆடவன் பின்னால் அழுவான்.
  • முதன்மையான அன்பு தாயன்பு, அடுத்தது நாயன்பு, அதற்கும் அடுத்தது காதலியின் அன்பு.
  • மூன்று சகோதரர்களில் இருவர் மூளையுள்ளவர், ஒருவன் விவாகமானவன்.
  • ரொட்டியும் உப்பும் இல்லாவிட்டால், காதல் இருக்க முடியாது.
  • வயது முதிர்ந்தவரைப் பார்த்து, உடம்பு எப்படி?' என்று கேட்க வேண்டாம், 'இப்போது என்ன நோய்?" என்று கேட்கவும்.
  • வயோதிகனுக்கு வாய்த்த இளம் மனைவி அவன் நரகத்திற்கு ஏறிச் செல்லும் குதிரை.
"https://ta.wikiquote.org/w/index.php?title=போலந்து_பழமொழிகள்&oldid=37994" இலிருந்து மீள்விக்கப்பட்டது