மதிப்பீடு
Appearance
மதிப்பீடு (Evaluation) என்பது குறித்த மேற்கோள்கள்.
- உண்மையாக மதிப்பிடுவதில் புகழ்வதோ, இகழ்வதோ குறிக்கோளன்று. ஆராய்ந்து பாகுபடுத்தி, உறுதியாக நிலைநாட்டி. அறிவோடு எடுத்துக்காட்டி, கண்ணியமான முறையில் தகுதியைக் கூறுவதே மதிப்பிடுதலுக்குரிய கடமைகள். - ஸிம்ஸன்[1]
- அரிஸ்டாட்டில் முதலில் அமைத்த மதிப்பிடும் முறை. சரியான முறையில் மதிப்பீடு செய்வதற்காக அமைத்த அளவுகோலாகும். - ஜான்ஸன்[1]
- பாசாங்கு மலிந்த இந்த உலகிலே, நடக்கும் பாசாங்குகளிலெல்லாம் மதிப்பிடுதல் என்னும் பாசாங்கிலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன். - ஸ்டெர்னி[1]
- நல்லதை எடுத்துக்காட்டுவதே விமரிசனத்தின் நியாயமான நோக்கம். - போவீ[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 295-296. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.