உள்ளடக்கத்துக்குச் செல்

மனச்சான்று

விக்கிமேற்கோள் இலிருந்து

மனச்சாட்சி அலலது மனச்சான்று என்பது தன்னுடைய செயல்கள் சரியானதா அல்லது தவறா என்பதை அடையாளம் காணும் மனதின் குரல் ஆகும்.

  • மனிதனின் மனச்சாட்சி தெய்வத்தின் குரல். பைரன்[1]
  • மனிதன் மனச்சான்றைப் பெற்றிருக்கிறான் என்பதைப் பார்க்கினும், அது அவனைப் பெற்றிருக்கிறது என்பது அதிக உண்மையாகும். - டோர்னர்[1]
  • பரிசுத்தமான மனச்சாட்சி உள்ளவன் அடக்கத்தோடும் அமைதியோடும் இருப்பான். - தாமஸ் அகெம்பில்[1]
  • ஒருவனுக்குத் தன்னுடைய இதயத்தைக்காட்டிலும் இருளடைந்த சிறை வேறு எது இருக்கின்றது? ஒருவனுக்குத் தன் மனச் சாட்சியைப் பார்க்கினும் கடுமையான சிறைக்காவலன் எவன் இருக்கிறான்? - ஹாதார்ன்[1]
  • மனச்சாட்சி ஆன்மாவின் குரல், உணர்ச்சிகள் உடலின் குரல்கள் இவைகளுக்குள் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுவதில் வியப்பில்லை. - ரூசோ[1]
  • மனச்சாட்சி ஒரு பெரிய பேரேடு அதில் நமது குற்றங்களெல்லாம் பதியப்பெறுகின்றன. உரிய காலத்தில் நாம் அவைகளை உணர்ந்துகொள்கிறோம். - பர்ட்டன்[1]
  • நம்முள்ளே தங்கியிருக்கும் மனச்சான்றைப் போல் பயங்கரமாகச் சாட்சி சொல்வோனுமில்லை. அவ்வளவு ஆற்றலுடன் குற்றம் சாட்டுபவனும் இல்லை. - லாஃபாகிளிஸ்[1]
  • மனச்சான்று நீதிபதியைப் போல் நம்மைத் தண்டிப்பதற்கு முன்னால், நமக்கு நண்பனைப் போல் எச்சரிக்கை செய்கின்றது - ஸ்டானிஸ்லாஸ்[1]
  • உன் இதயத்திலுள்ள தெய்விகச் சுடரான மனச்சான்றினை அனைந்துவிடாமல் காத்துக்கொள். -வாஷிங்டன்[1]
  • கோழைத்தனம், 'அது ஆபத்தில்லையா?' என்று கேட்கும்; சமயோசிதம். 'அதில் பயனுண்டா?' என்று கேட்கும். செருக்கு 'அதில் புகழுண்டா?' என்று கேட்கும். ஆனால், மனச்சாட்சி, 'அது நியாயமா?’ என்று கேட்கும். - புன்ஷான்[1]
  • மனச்சான்று ஆட்சி செய்யத் தொடங்கும் பொழுது என் ஆட்சி முடிகின்றது. - நெப்போலியன்[1]
  • உண்மையான மகிழ்ச்சியின் அடிப்படை மனச்சான்றில் உள்ளது - ஸெனீகா[1]
  • நான் போப்பாண்டவருக்கும். அவருடைய திருத் துணைவர்களுக்கும் அஞ்சுவதைவிட என் நெஞ்சுக்கு அதிகம் அஞ்சுகிறேன். என்னுள்ளே ஒரு பெரிய போப்பாண்டவர் இருக்கின்றார். அவரே மனச்சான்று. - லூதர்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 300-301. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மனச்சான்று&oldid=35561" இலிருந்து மீள்விக்கப்பட்டது