உள்ளடக்கத்துக்குச் செல்

மம்தா பானர்ஜி

விக்கிமேற்கோள் இலிருந்து
மம்தா பானர்ஜி (2008)

மம்தா பானர்ஜி (Mamata Banerjee, பிறப்பு 5 சனவரி 1955) மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் நிறுவனத்தலைவரும் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • ஒரு அரசியல் கட்சி கற்பழிப்பு கற்பழிப்பு என்று கூக்குரலிட்டு இதையெல்லாம் செய்கிறது. இந்த நாடகத்தை தீங்கு விளைவிப்பவர்கள் ஆடுகிறார்கள், அவர்கள் ஹர்மாட்களின் உதவியுடன் ஒரு செயலை அரங்கேற்றுகிறார்கள், இது வங்காளத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.
  • மகிழுந்துகள் அதிகரித்து வருகின்றன. வணிக வளாகங்கள் அதிகரித்து வருகின்றன. பலதிரை வளாகங்கள் அதிகரித்து வருகின்றன. நமது இளைஞர்கள் நவீனமாகி வருகிறார்கள். மேலும் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதாகச் சொல்கிறீர்கள்.
  • இம்மாநிலம் முழுவதும் கற்பழிப்பு செய்பவர்களின் பூமியாக மாறிவிட்டதைப் போல தினமும் கற்பழிப்பு சம்பவங்கள் வெளிச்சம் போட்டு பத்திரிகைகளில் காட்டப்படுகின்றன. இவர்களால் கற்பழிப்பு போற்றப்பட முற்படுகிறது. இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எதிர்மறைப் பத்திரிக்கையினால் மட்டுமே அழிவு ஏற்படும், நேர்மறை பத்திரிக்கை வெற்றிகொள்ளும் நேரம் இது என்றும் நான் கூற விரும்புகிறேன்.
  • ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பாஜகவுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்; உதவியையும் செய்யாதீர்கள்; அவர்களுக்கு வாக்கும் செலுத்தாதீர்கள். நீங்கள் பாஜகவுக்கு உதவினால் என்னை விட்டுவிடுங்கள், மற்றவர்கள் எவரும் உங்களை மன்னிக்கமாட்டார்கள். இதை நான் அல்லாவின் மீது சத்தியம் செய்துகூறுகிறேன்.
  • நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்புறத்திலிருந்து ஒரு வாகனம் வந்து எனது வண்டில் மோத முற்பட்டது. எனது ஓட்டுநர் மட்டும் உடனடியாக வண்டியை நிறுத்தாமல் இருந்திருந்தால், நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். இந்த திடீர் நிறுத்தத்தால், முகப்பலகையில் அடிபட்டுச் சிறு காயமடைந்தேன். என் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பாலும் ஆசியாலும் தான் நான் பாதுகாக்கப்பட்டேன்
  • தியானம் என்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்... ஆனால், யாராவது தியானம் செய்யும் போது ஒளிப்படக்கருவிகளை எடுத்துச் செல்வார்களா... விதவிதமாக ஒளிப்படம் எடுப்பார்களா... மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்புவரை, தியானம் என்ற பெயரில், ஏசி அறையில் சென்று உட்காருகிறார். மோடியின் இந்த செயல் குறித்து எந்தக் கட்சியும் ஏன் எதுவும் சொல்லவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மம்தா_பானர்ஜி&oldid=38317" இலிருந்து மீள்விக்கப்பட்டது