மருது பாண்டியர்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  • என்னுடைய வாரிசுகளைத் தருவித்து என் ஜமீனைக் கொடுக்க வேண்டும். என்னுடைய ஜமீன் சொத்துக்களை யாவும் என் சந்ததிகளுக்குக் கொடுத்து விடுவதாகவும், நான் அமைத்திருக்கிற தரும நிலையங்களுக்கு நான் ஏற்படுத்தியிருக்கிற பிரகாரம் யாவும் ஒழுங்காக நடத்தி வருவதாகவும், நீங்கள் இப்பொழுது எனக்கு உறுதிமொழி தரவேண்டும். அதற்கு அத்தாட்சியாகக் கவர்ன்மெண்டு கத்தியைப் போட்டுத் தாண்டி நீங்கள் சத்தியம் செய்து தரவேண்டும்.இது சத்தியம். —மருதுபாண்டியர் (10-10-1801, தூக்கிலிடப்படுவதற்கு முன் கொடுத்த மரணவாக்குமூலம்)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 8. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மருது_பாண்டியர்&oldid=18919" இருந்து மீள்விக்கப்பட்டது