உள்ளடக்கத்துக்குச் செல்

மலையாளப் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

அகரவரிசையில் மலையாளப் பழமொழிகள் தரப்பட்டுள்ளன.

 1. அகத்தினழகு முகத்தில் தெரியும்.
 2. அகப்பட்டால் பன்றி சுரைக்காயும் தின்னும்
 3. அக்காவின் உடமை அரிசி, தங்கை உடமை தவிடு
 4. அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் ஓதாது.
 5. அஞ்சு பெண் கட்டியவன் ஆண்டி
 6. அஞ்சு வயசில் அண்ணன் தம்பி பத்து வயசில் பங்காளி.
 7. அஞ்சு விரலும் ஒன்று போல் ஆகுமா?
 8. அடக்கம் இருந்தால் ஆயுள் முழுமையடையும்,
 9. அடைமழை விட்டாலும் செடிமழை விடாது.
 10. அடியாத மாடு பணியாது.
 11. அடிக்கின்ற கை அணைக்கும்.
 12. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்
 13. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
 14. அடி நாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் தேனும்.
 15. அட்டையைப்பிடித்து மெத்தையில் கிடத்தினால் கிடக்குமோ?
 16. அண்டத்திலுள்ளதே பிண்டத்திலும் காணும்.
 17. அதற்கொரு காலம் இதற்கொரு காலம்
 18. அதிவேகம் ஆபத்து மிக்கது.
 19. அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா என்று அழைக்க முடியுமா?
 20. அத்திபூத்தாற்போல்
 21. அத்திப்பூவையும் ஆந்தைக்குஞ்சையும்ம் யாரும் கண்டதில்லை
 22. அந்தியில் வரும் மழை நீளும்.
 23. அம்பட்டன் செம்பட்டு உடுத்தாலும் அம்பட்டன் தான்.
 24. அம்பட்டனின் குழந்தைக்கு மயிருக்கு குறைச்சலோ?
 25. அம்பினால் வராததும் வம்பினால் வரும்.
 26. அம்மா வயிற்றில் எல்லாவற்றையும் படித்துவந்தவர் யாரும் இல்லை
 27. அம்மாயின் சாபம், அம்மா இறந்தாலும் அழியாது.
 28. அம்மாவின் பாசத்திற்கு அளவில்லை
 29. அரைக் குடம் கூத்தாடும்.
 30. அரசன் அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்.
 31. அரசனில்லா நாடு நரகம்.
 32. அரசன் வீழ்ந்தால் படையில்லை.
 33. அரைச்சாண் கடித்தால் ஒருசாண் வளரும்.
 34. அரணை கடிச்சால் உடனே மரணம்.
 35. அரையடிமண்ணில் ஆயிரம் பாம்பு.
 36. அற்ப லாபம் பெருஞ்சேதம்.
 37. அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.
 38. அவலினை நினைத்து உரலை இடி,
 39. அளக்கின்ற நாழி, அரிசியின் விலை அறியுமோ?
 40. அழகுள்ள பலாப் பழத்தில் சுளையில்லை.
 41. அறிந்தவனுடன் பேசு, அறியாதவனுடன் பேசாதே
 1. அந்தக் காட்டிற்கு அந்த குரங்கு எனில், இந்த காட்டிற்கு இந்த குரங்கு
 2. ஆகாயம் வீழுமென்ற நிலை வந்தாலும் யாரேனும் முட்டுகொடுக்க முடியுமா?
 3. ஆடு அங்காடி வாணிபம்.அறியுமோ?
 4. ஆடிக்காற்றில் யானையும் பறக்கும்,
 5. ஆட்டை நாயென சொல்லுக.
 6. ஆடிய காலும் பாடிய வாயும் அடங்கி இருக்காது.
 7. ஆடு கால் பணம் பிடுக்கு முக்கால் பணம்.
 8. ஆடு பிடிக்கச் சென்றால் கரடி அகப்படுகிறது.
 9. ஆடு மேய்ந்த காடு போல்
 10. ஆட்டின் தோல் போர்த்திய நாயைப் போலே
 11. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் சாமிக்கு மூன்று கொம்பு
 12. ஆட்டைப் பிடித்து, மாட்டைப் பிடித்து மனிதனைப் பிடிக்கிறாயே
 13. ஆணாகப் பிறந்தவனுக்கு பெண் வேண்டும்.
 14. ஆணிற்கு அடங்காத பெண்ணில்லை
 15. ஆணை அடித்து வளர்க்க வேண்டும், பெண்ணை போற்றி வளர்க்க வேண்டும்.
 16. ஆணுக்கு ஒரு வீடு பெண்ணுக்கு இரண்டு வீடுகள்
 17. ஆணும் பெண்ணும் நெய்யும் தீயும்.
 18. ஆண்டிச்சி பெற்றதஞ்சும் குரங்கு
 19. ஆபத்தில் பாவமில்ல.
 20. ஆபத்துகாலத்தில் அரைஞாண் சரடும் பாம்பாகும்.
 21. ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
 22. ஆயிரம் அம்பட்டக்கத்தியைச் சேர்த்தாலும் ஒரு மரத்தை வெட்ட முடியாது
 23. ஆயிரம் உள்ளவர் அமந்திருப்பார், அரைப் பணம் உள்ளவர் ஆடித்துள்ளுவார்.
 24. ஆயிரம் கண்களை பொட்டையாக்குபவனே அரை வைத்தியன்
 25. ஆயிரம் வந்தாலும் ஆயிரம் போனாலும் எனக்கொன்றும் இல்லை.
 26. ஆயிரம் குதிரையை வேட்டையாடினாலும் வீரன், மரப்பட்டியோடு புதைக்கப்படுவான்.
 27. ஆயிரம் பணம் போனாலும் போகட்டும், மன அமைதியே முக்கியம்
 28. ஆயிரம் பாடல்கள் படித்தவன் அரைக்கவி.
 29. ஆயுள் உள்ளவர்க்கு ஆசை உண்டு.
 30. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
 31. ஆள் பாதி, ஆடை பாதி.
 32. ஆள் மாறி கலப்பப் பிடித்தாலும் காளை உழும்.
 33. ஆளுக்கு ஆள் போல், மரத்திற்கு வேர்
 34. ஆழத்தில் உழுது அகலத்தில் நடுக.
 35. ஆழம் அறியாமல் ஆற்றில் இறங்காதே
 36. ஆழமுள்ள கிணற்றிற்கு நீளமுள்ள கயறு
 37. ஆறிய கஞ்சி, பழங்கஞ்சி.
 38. ஆறிலும் மரணம் நூறிலும் மரணம்.
 39. ஆறு நாட்டில் நூறு மொழிகள்
 40. ஆறும் அறுபதும் ஒரு போலெ.
 41. ஆட்கள் கூடினால் பாம்பிற்கு சாவில்லை.
  • பலர் கூடி உடிவெடுக்கும் போது பல்வேறு எண்ணங்கள் இருக்கும். ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வரும். ஒரே முடிவை எடுப்பது கடினம் என்பது இதன் பொருள்.
 1. இக்கஞ்சிக்கு இச்சம்மந்தி.
 2. இக்கரையில் நின்றால் அக்கரைப் பச்சை.
 3. இங்கிதம் அறியாதவர்க்கு சங்கீதம் அறிந்து ஆகப் போவது ஒன்றுமில்லை.
 4. இஞ்சி தின்ற குரங்கினைப் போல்.
 5. இடது கைக்கு துணை வலது கை.
 6. இடங்கொடுத்தால் மடம் பிடுங்கும்.
 7. இடிவெட்டிய மரம் போல்.
 8. இட்டது சட்டம்.
 9. இணங்கிய பறவை கூட்டில், இணங்காத பறவை காட்டில்.
 10. இனம் இனத்தோடு குலம் குலத்தோடு.
 11. இன்று சிரிப்பவன், நாளை அழுவான்
 12. இன்று நான் நாளை நீ.
 13. இன்று எனக்கு, நாளை உனக்கு
 14. இரையிட்டால் மீன் சிக்கும்
 15. இரவல் புடவையைக் காட்டிலும் பழந்துணியே மேல்
 16. இருதோணியில் கால் வைத்தால் ஆற்றின் நடுவில் விழும் நிலை வரும்
 17. இருமுலைக்கு இடையில் பெரும் லோகம்.
 18. இரும்பு பழுத்திருக்கும் போது அடிக்க வேண்டும்.
 19. இருள் ஒருகாலம் வெளிச்சம் ஒருகாலம்.
 20. இல்லம் நிரை, வல்லம் நிறை, பத்தாயம் நிறை, வயறு நிறை
 21. இல்லாமையும் வல்லாமையும் எல்லார்க்கும் வரும்.
 22. இள நாய் கடி அறியுமோ, இளம்போத்து வெட்டு றியுமோ?
 1. ஈர் எடுத்ததின் கூலி பேன்.
 • உடுதுணிக்கு மறுதுணியில்லை.
  • உடுத்தியிருக்கும் துணிக்கு வேறு துணியில்லாதவர் ஏழை.
  உண்ட சோற்றிற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.
  உண்ணியை கண்டால் ஊரையே அறியலாம்.
  • ஒராளைக் கண்டாலே, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி அறியலாம்.
 • ஏட்டில் உள்ள புல்லை பசு தின்னாது.
  • நூலறிவால் விளைவது எதுவுமில்லை. உலக அறிவே முதன்மையானது
 • கஞ்சி தராமல் கொன்றுவிட்டு, இறந்தபின்னர் பால்பாயசம் படைத்தல்
  • வாழும் வரை மதிக்காமல் இருந்துவிட்டு இறந்தபின்னர், படையல் இட்டு வழிபடுதல்
  கரைகின்ற குஞ்சே பால் குடிக்கும்
  • தேவை இருக்கும் போது கேட்டுப் பெறுபவனே அறிவாளி.
  காற்றுள்ளப்போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.
  குருடர்கள் யானையைக் கண்டதைப் போல்
  • ஒன்றைப் பற்றி அறியாமலேயே பல கருத்துகளைக் கூறுவதைக் குறிக்கிறது.
 • தாழ்ந்த நிலத்தில் நீரோடும்.
  • பணிவுடன் இருப்பவர்க்கே உயர்வும் நன்மையும் வரும்.
  தொடருக, தொட்டால் விடாதே.
  • ஏதாவது ஒரு செயலை தொடங்கினால் முடியும் வரை கவனம் இருக்க வேண்டும்.
  தானம் கிட்டிய பசுவின் வாயைப் பார்க்காதே
 • நாயின் வால் பன்னிராண்டு காலம் நிமிர்த்தினாலும் வளைந்தே இருக்கும்.
 • பெண்புத்தி பின்புத்தி.
  பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லாதே
 • வந்த வழியை மறக்காதே
  • செல்வ வளம் பெருகிய பின்னர், பழைய கால வாழ்க்கையை மறக்கக் கூடாது.
  வேலி தாண்டிய பசுவிற்கு கோலால் மரணம்
  • தவறான வழியில் சென்றால் ஆபத்து நேரிடும்.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=மலையாளப்_பழமொழிகள்&oldid=36759" இலிருந்து மீள்விக்கப்பட்டது