மஸ்லின் துணி
Jump to navigation
Jump to search

மஸ்லீன் (Muslin) என்பது ஒரு வெற்று நெசவால் நெய்யப்பட்ட ஒரு பருத்தி ஆடையாகும். இது உலகின் மிக மென்மையான, லேசான கைத்தறி ஆடை ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ஆங்கிலேயர் சுமார் 300 வருஷங்களுக்குமுன் இந்தியாவுக்கு வந்தபொழுது நம் கைத்தொழில் முன் போலவே சிறப்பாக நடந்து வந்தது. 1602 - ஆம் வருஷம் காப்டன் லங்காஸ்டர் துரை 20 கஜமுள்ள டாக்கா மஸ்லின் துணியைக் கைக்குட்டை போல் மடித்துத் தம் மகாராணி எலிசபெத் அம்மைக்குக் காணிக்கையாக அனுப்பியிருக்கிறார். இன்னமும் ஆங்கிலேயர்களுக்கு இது ஞாபகத்திலிருக்கிறது. ஏனெனில் நான் லண்டனிலிருந்தபோது, என்னிடம் ஆங்கில நண்பர்கள் ‘அழகான டாக்கா மஸ்லின் உன்னிடம் இருக்க வேண்டுமே அதைக் காட்டு’ என்றார்கள். என்னுடைய அறியாமைக்காக விசனப்பட்டேன். —டாக்டர் திருமதி அருள்மணி பிச்சமுத்து, 1930-ல், தூத்துக்குடி கதர்க் காட்சியைத் திறந்து வைத்த போது பேசியது.)[1]
சான்றுகள்[தொகு]
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.