மாக்சிம் கார்க்கி
Appearance
மாக்சிம் கார்க்கி (Maxim Gorky, 28 மார்ச் 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. "தாய்" போன்ற பெயர் பெற்ற படைப்புகளைத் தந்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை.
- எனது பெரும்பாலான கவிதைகள் இறந்தே பிறந்தன.
- கணிதம் பற்றிய விசயத்தில் நான் ஒரு அப்பாவி. என்னை அதிலிருந்து விலக்கிவிடுங்கள். நான் கணிதத்தை விரும்பவில்லை. காரணம் அவை வெறும் எண்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. அவைகளில் கற்பனையும் அழகும் சேருவதில்லை.
- அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டுபண்ணுவது என்பது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல
- புரட்சி செய்யப் பிறந்ததே இலக்கியம்.
- நான் இயற்கையின் வரப்பிரசாதம் பெற்றவன் என்று இங்கே பாராட்டினார்கள். அப்படி நான் எண்ணவில்லை. உங்களில் ஒருவனாகவே நானும் பிறந்தேன். நாம் சொற்களிலும், வண்ணங்களிலும், இசையிலும், கலாசாரத்திலும், போற்றிப் புகழுகிறோமே அந்த இயற்கை, என் கனவுகளில் இல்லை! நாம் வியந்து போற்றும் அவ்வியற்கை, தனது வெப்பத்தாலும், வெள்ளத்தாலும். பூகம்பத்தாலும் வியாதியாலும் நம்மை வதைக்கிறது. இயற்கையில் குடி கொண்டிருக்கும் நமது எதிரிகள் அனைத்தையும் எண்ணிப் பாருங்கள். அப்படியானால், நான் இயற்கையின் அருள் பெற்றவன் என்று கூறமாட்டிர்கள்! பார்லி பயிரில் கூட அழகிய புல்லுருவிகள் இருப்பதை மறந்து விடாதீர்கள்.
- (1928-ல் திமிலிஸி நகரில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில்)[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- Brief biography
- Gorky Archive at Marxists.org
- "Anton Chekhov: Fragments of Recollections" by Maxim Gorky