உள்ளடக்கத்துக்குச் செல்

மாக்ஸ் முல்லர்

விக்கிமேற்கோள் இலிருந்து

மாக்ஸ் முல்லர் (திசம்பர் 6, 1823 - அக்டோபர் 28, 1900), என்று பரவலாக அறியப்பட்ட பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர் (Friedrich Max Müller) ஒரு ஜெர்மானிய மொழியியலாளரும், கீழைத்தேச ஆய்வாளரும் ஆவார். இந்தியவியலைத் தொடக்கி வைத்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் இவர், சமய ஒப்பாய்வுத் துறையை உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார்.

இவரது மேற்கோள்கள்

[தொகு]
  • மனிதன் நித்தியமானவன் என்ற நம்பிக்கையில்லாத மதம், ஒற்றைத் தூணில் நிற்கும் வளைவு போலவும், இறுதியில் படுகுழியைக் கொண்டுள்ள பாலம் போலவும் உள்ளது.[1]
  • தத்துவ ஞானத்தை 'அறிவை அறியும் அறிவு' என்பர். ஆனால் உண்மையில் அது அறியாமையை அறியும் அறிவே ஆகும். அல்லது கான்ட் கூறுவதுபோல் அது அறிவின் எல்லையை அறியும் அறிவே ஆகும்.[2]
  • நாம் எண்ணுவதிலும் அதிகமாய், உலகத்தில் சாதுக்களும் பெரியோர்களும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க, நாமெல்லாம் மனம் வருந்துவதேன்? ஒருவனுடைய புகழ்நிலையானதா என்பதை நீ அறிய விரும்பினால், பெரிய நூல் நிலையத்திற்குப் போ. உண்மையான நிலைபேறென்பது, ஒருவனது மிகச் சிறந்த செயல்களேயாகும். ஆகையால், இராஜாராம் மோகன்ராய் என்னும் இம் மகாபுருஷனுடைய வரலாற்றைப் படித்து நாமும் நற்குணமும் நன் முயற்சியும் உடையவர்களாய், ஒன்றான பரமாத்துமாவை அன்புடன் உபாசித்து, அவரது கைங்கரியமாகிய நற்செயல்களைச் செய்து நமது வாழ்நாளைப் பயனுள்ளதாய்ச் செய்யும்படி முயலுவோமாக. (27-9-1883) [பிரிஸ்டல் நகரத்தில் நடைபெற்ற இராஜாராம் மோகன்ராய் 50-வது நினைவு விழாவில்][3]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 37-38. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தத்துவ ஞானம். நூல் 42- 44. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 8-9. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மாக்ஸ்_முல்லர்&oldid=21663" இலிருந்து மீள்விக்கப்பட்டது