முகமது இக்பால்
Appearance
சர் முகமது இக்பால் (Muhammad Iqbal, உருது: محمد اقبال; நவம்பர் 9, 1877 ஏப்ரல் 21, 1938) என்பவர் பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், அரசியல்வாதியும் ஆவார். உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெரும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களுக்கெனத் தனிநாடு கோரிய இவரது தூரநோக்கு பாகிஸ்தான் என்ற நாட்டைப் பின்னர் உருவாக்குவதற்கு ஊக்கமூட்டியது.
இவரது கருத்துகள்
[தொகு]- என்னை இக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு போய்க் கலவரங்கள் தடக்கும் இடத்தில் வையுங்கள். துப்பாக்கிக் குண்டு முதலில் என் நெஞ்சில் தைத்து நான் சாகிறேன். அப்படியாவது ஒற்றுமை உண்டாகட்டும். (பஞ்சாபில் ஷாஹித் கஞ்ச் மஸ்ஜித் விஷயமாக முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளும் அதை அடக்க ராணுவமும் வந்தபோது கூறியது.)[1]
- ஒவ்வொரு வரும் ஏதாவது ஓர் அந்தரங்க சுயநல நோக்குடன் சட்டசபைக்கு வருகின்றனர். எனக்கு அவ்வித நோக்கு ஒன்றுமில்லை; அதனால் நான் சட்டசபையில் மீண்டும் புகவும் விரும்பவில்லை. -(1926)[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.