உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்காலே

விக்கிமேற்கோள் இலிருந்து

தாமஸ் பேபிங்டன் மெக்காலி (25 அக்டோபர் 1800-28 -திசம்பர் 1859) பரவலாக மெக்காலே என அறியப்படும் இவர் 1834ஆம் ஆண்டு இந்தியாவின் கல்வித்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டவர். கல்விமுறையை வடிவமைக்கும் அறிக்கையைத் தயார் செய்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • ஐரோப்பிய நூலகம் ஒன்றின் அலமாரியின் ஒரே ஒரு அடுக்கு, இந்திய-அரேபிய இலக்கியத்தின் ஒட்டுமொத்த சாரத்தைவிட மேன்மையானது.
  • இந்த நாட்டுத் தாய்மொழிகளைச் செழுமைப்படுத்தி அவர்களுக்கு கையளிப்போம். மேல்நாட்டு பெயரீட்டு முறைகளிலிருந்து அறிவியல் சொற்களைக் கடன்பெற்று நாம் இம் மக்களுக்கு வழங்கும்போது, அது அவர்களின் மொழிகளின் ஊடாக வளமான அறிவைக் கொண்டு சேர்க்கும் ஊர்தியாக மாறும். படிப்படியாக மாபெரும் மக்கள் திரளுக்கு அறிவைக் கொண்டு செலுத்தும் பொருத்தமான ஊர்தியாக அதை அவர்கள் பயன்படுத்தட்டும்.
  • ஆங்கில இலக்கியமும் அறிவியலும் கற்பது இந்தியர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
  •  படிப்பில் பிரியமில்லாத அரசனா யிருப்பதைவிட ஏராளமான நூல்களுடைய ஏழையாயிருப்பதையே விரும்புவேன். [1]
  • வீடு வீடாகச் சென்று 'வாக்கு' சேகரிப்பது பெருந்தவறான காரியம். பொது மக்கள் தங்கள் பொறுப்பைக் கடமையை உணர்ந்து நடந்துகொண்டால் ‘வாக்கு’ சேகரிக்கும் வீண் வேலை ஏன்? பயனற்ற-உயரிய குண நலன் அற்ற-திறனற்ற ஒருவரை மக்கட் பிரதிநிதி என்று கூறி, அந்த மனிதருக்கு ’வாக்கு’ போடுமாறு போய்க் கேட்பது வாக்காளரை அவமானப் படுத்துவதாகும்.— (1832)[2]
  • உலகத்திலுள்ள ‘மில்டனின் புத்தகங்களையெல்லாம் எரித்து விட்டால் கூட, என் ஞாபக சக்தியைக் கொண்டு, மீணடும், அவைகளை அப்படியே எழுதிவிடுவேன்.[3]

நபர் குறித்த மேற்கோள்

[தொகு]
  • மெக்காலேவின் தந்தை ஜக்காரி மெக்காலே கறுப்பின மக்களின் விடுதலைக்கு உதவினார். ஆனால், அவரது மகன் தாமஸ் மெக்காலே அதைவிட மோசமான பழமைவாதப் பிடியில் இருந்த இந்தியாவைத் தனது கல்வி மூலம் மீட்டெடுத்தார்.[4]
    • 1878 சூன் 6 அன்று, இராசாராம் மோகன்ராயின் நண்பரான டேவிட் ஹாரேவின் 35வது நினைவு நாள் கூட்டத்தில் பேச வந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சீர்திருத்தவாதியுமான சுரேந்திர நாத் ஆற்றிய உரையில் குறிப்பிட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. அருண் கண்ணன், மெக்காலே: இந்திய நவீனக் கல்வியின் பிதாமகன், இந்து தமிழ் திசை, 25, அக்டோபர், 2023

,

"https://ta.wikiquote.org/w/index.php?title=மெக்காலே&oldid=38405" இலிருந்து மீள்விக்கப்பட்டது