மேற்கோள் தொகுப்பு

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

பல்வேறு இயல்கள் குறித்த பலரின் மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்படும். ஒரே இயல் குறித்து நான்குக்கு மேற்பட்ட மேற்கோள்கள் இருந்தாலோ ஒரே நபர் கூறிய நான்குக்கு மேற்பட்ட இயல்கள் இருந்தாலோ அவற்றுக்குத் தனிப்பக்கம் தொடங்கலாம்.

மழலை[தொகு]

  • மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே - குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும்

புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே

வரி[தொகு]

  • வைகல் தோறும் இன்பமும் இளமையும் எய் கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து - இவ்வுலகத்தில் நாள்தோறும் வில்லிலிருந்து புறப்படும் அம்பின் செல்லும் நிழல் எப்படி மறையுமோ“ அப்படி இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.

வாழ்க்கைப் புதிர்[தொகு]

  • முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை - ஒருகாலத்தில் முதுமையடைந்தோர் மறுபடியும் அழிந்த இளமையை எய்துவது இல்லை! அதே போல், “வாழ்நாளின் அளவு இவ்வளவு என்பதை அறிந்தவரும் இல்லை!

புரூசு லீ[தொகு]

புரூசு லீயின் தத்துவங்களுள் சில:

  • சுதந்திரமாக உன்னை வெளிப்படுத்திக் கொள்ள நேற்றைய நீ மடிய வேண்டும். பழமையிலிருந்து நீ பாதுகாப்பைப் பெறுகிறாய்; புதுமையின் மூலம் நீ பெருக்கெடுத்து இயங்குவாய்.
  • குழந்தையின் அழுகையை நிறுத்தும் பொருட்டு மஞ்சள் இலைகள் தங்கக் காசுகள் ஆகலாம்; அது போல, ஒளிமறை இயக்கங்களும் முறுக்கிய தோற்றமைவுகளும் விசயமறியாத வீரக்கலை ஆர்வலர்களைத்தான் திருப்தி செய்யும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

ஜெயகாந்தன்[தொகு]

  • மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்
"https://ta.wikiquote.org/w/index.php?title=மேற்கோள்_தொகுப்பு&oldid=12269" இருந்து மீள்விக்கப்பட்டது