உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்கல் ஜோர்டன்

விக்கிமேற்கோள் இலிருந்து
மைக்கல் ஜோர்டன் (2006)

மைக்கல் ஜெஃப்ரி ஜார்டன் (Michael Jeffrey Jordan, பிறப்பு - பெப்ரவரி 17, 1963) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 30.1 புள்ளிகள் எடுத்த ஜார்டன் என். பி. ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2003 வரை விளையாடினார். 1984 முதல் 1993 வரை சிகாகோ புல்ஸ் அணியில் விளையாடி என்.பி.ஏ.-யிலிருந்து விலகினார். ஒரு ஆண்டாக w:பேஸ்பால் விளையாடி 1995இல் சிக்காகோ புல்ஸ் அணிக்கு திரும்பினார். மொத்தமாக சிக்காகோ புல்ஸ் அணியில் இருக்கும்பொழுது 6 முறையாக என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளை வென்றுள்ளார்.

கூற்றுக்கள்

[தொகு]
  • நான் தோல்வியை ஒப்புக்கொள்ளுவேன், ஆனால் மறுதடவை முயற்சி செய்யாமல் இருப்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன்.
  • நான் என்பது குழுவில் இல்லை, ஆனால் வெற்றியில் உண்டு.
  • நான் பல தடவைகள் தோல்வியை சந்தித்துள்ளேன், ஆதலாலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன்.
  • வெற்றி பெறுவதைக் கற்றுக்கொள்ள, முதலில் தோல்வியை கற்க வேண்டும்.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=மைக்கல்_ஜோர்டன்&oldid=37303" இலிருந்து மீள்விக்கப்பட்டது