யாத்திசை
Appearance
யாத்திசை (Yaathisai) என்பது 2023 இல் வெளியான ஒரு இந்தியத் தமிழ் வரலாற்று அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தை தரணி இராசேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.
கவனம் ஈர்த்த உரையாடல்கள்
[தொகு]- ஆட்சிக்கு அடிப்படை அதிகாரம் மட்டுமே
- பெரும் குடிகளுக்கு இடையே நிகழும் போர் சிறு குடிகளை அழித்து விடும்
- காமமே நம் இளமைக்கு காரணம்
- கொதி கூறுவது- என் பெற்றோரிடம் நான் கேட்ட அதே கேள்விகளை என் பிள்ளைகள் என்னிடம் கேட்க விடக்கூடாது.
- சோழநாட்டு அந்தணர் கேட்பது- அந்தணர் என்கிறீர் ஆனால் கையில் காப்பு கட்டி உள்ளது. முறுக்கேறிய தசைகள், வீரத் தழும்புகள்.. எப்படி?
கொதியின் பதில்: சேர அந்தணர்கள் பரசுராமர் வழி வந்தவர்கள் - பாண்டியன் இரணதீரன் கொதி குறித்து கூறுவது- மூன்று இலட்சம் படை வீரர்களைக் கொண்ட ஒரு அரசை ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு சிறு படை எதிர்க்கத் துணிந்தால் அவனே வீரன். அந்த வீரனுக்கு வீர சுவர்கத்தை பரிசாக அளிப்போம்.
- தேவரடியார் பெண் கொதியிடம் கூறுவது- என் இசையில் உன் அழிவு தெரிகிறது.
கொதியின் மறுமொழி-பெண்ணும், இசையும் ஆணின் விருப்பங்கள், அழிவுகளல்ல. - கொதியின் எள்ளல் கூற்று- ரணதீரன் ஒரு வீரன், ஒரு சில நூறு வீரர்களை எதிர்க்க பல ஆயிரம் படை வீரர்களுடன் வருகிறான்
- மதம் கொண்ட யானை தானே நிலை சேரும், அதுவரை நாம் காத்ததிருப்போம்.
- நீ உயர்ந்தவன், உன்னோடு இணைவதால் நானும் உயர்ந்தவன் ஆகிறேன்.
- கொதியின் கூற்று- என் மகன் ஒரு நாள் அரசனாகவே பிறப்பான்.
- ரணதீரன் மட்டுமல்ல, எல்லா அரசர்களும் அதிகாரத்திற்கு பயந்தனர், இங்கே அதிகாரம் மட்டுமே நிலையானது, அரசர்களோ, அரசுகளோ நிலையானது இல்லை.
- அரசர்கள் அவர்களது அதிகாரத்தைதக்க வைக்கவே எல்லாப் போர்களையும் நிகழ்த்தினார்கள்.