யூதப் பழமொழிகள்
Jump to navigation
Jump to search
இப்பக்கத்தில் யூதர்களின் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- உலகம் மெச்சும் நல்லவனை அவன் மனைவி மட்டும் மோசமானவனாகக் கருதுவாள்.
- உன் மனைவி குள்ளமாயிருந்தால், நீ குனிய வேண்டும்.
- ஊமை மனைவி வாயால் ஏசமாட்டாள், கைகளை நெரித்து ஏசுவாள்.
- ஒரு பெண்ணுக்குப் பின்னால் செல்வதைவிட, ஒரு மனிதன் சிங்கத்தின் பின்னால் செல்வது மேல்.
- ஒரு மனிதனைத் தெரிந்து கொள்வதினும், பத்து நாடுகளைத் தெரிந்து கொள்ளல் எளிது.
- ஒரு வீட்டை வாங்குமுன், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
- கலியாணம் செய்து கொள்ளும் மகன் தாயை விட்டுத் தாரத்தைப் பிடித்துக் கொள்கிறான்.
- கழுதை ஏணிமேல் ஏறும்பொழுது, பெண்களிடம் நாம் ஞானத்தைக் காணலாம்.
- கிழவன் ஒரு குமரியை மணந்து கொண்டால், அவன் இளைஞனாகி விடுவான், குமரி கிழவியாவாள்.
- கெட்ட பெண்களிடமிருந்து உன்னைக் காப்பாற்றும்படி ஆண்டவனை வேண்டு; நல்ல பெண்களிடமிருந்து நீயே உன்னைக் காத்துக்கொள்.
- தந்தை யில்லாத குழந்தை பாதி அநாதை; தாயில்லாத குழந்தை முழு அநாதை.
- தலைசிறந்த மரணத்தைவிட, மட்டமான வாழ்க்கையும் மேலானது.
- தாயிலே கெட்டவளுமில்லை, சாவிலே நல்லதுமில்லை.
- நல்ல மாற்றாந்தாய்க்குச் சுவர்க்கத்தில் தங்க நாற்காலி காத்திருக்கிறது.
[அப்படி ஒருத்தி கிடைக்க மாட்டாள்.]
- நிலம் வாங்குவதற்கு என்றால், வேகமாக ஓடு; விவாகம் செய்து கொள்வதற்கு என்றால், மெதுவாக நட
- நீ காலையைக் கண்டிருக்கிறாய், இன்னும் மாலையைக் காண வில்லை
- பிராணிகளின் படைப்பில் பெண்ணே முதன்மையான எழிலுடையவள்.
- பெண்களை அழவிடுவதில் மனிதர்கள் கவனமா யிருக்கவேண்டும்; ஏனெனில் ஆண்டவன் அவர்களுடைய கண்ணீர்த் துளிகளை எண்ணிப் பார்க்கிறான்.
- மனைவி உறங்கும் பொழுது, (சாமான்) கூடையும் உறங்குகின்றது.
- வாழ்க்கை மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கடன்தான மரணம் என்னும் கடன்காரன் அதைப் பெற்றுக் கொள்ள ஒருநாள் வருவான்.