யூதப் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இல் இருந்து
(யூத பழமொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இப்பக்கத்தில் யூதர்களின் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • ஒரு பெண்ணுக்குப் பின்னால் செல்வதைவிட, ஒரு மனிதன் சிங்கத்தின் பின்னால் செல்வது மேல்.
  • ஒரு மனிதனைத் தெரிந்து கொள்வதினும், பத்து நாடுகளைத் தெரிந்து கொள்ளல் எளிது.
  • கழுதை ஏணிமேல் ஏறும்பொழுது, பெண்களிடம் நாம் ஞானத்தைக் காணலாம்.
  • கெட்ட பெண்களிடமிருந்து உன்னைக் காப்பாற்றும்படி ஆண்டவனை வேண்டு; நல்ல பெண்களிடமிருந்து நீயே உன்னைக் காத்துக்கொள்.
  • தந்தை யில்லாத குழந்தை பாதி அநாதை; தாயில்லாத குழந்தை முழு அநாதை.
  • தலைசிறந்த மரணத்தைவிட, மட்டமான வாழ்க்கையும் மேலானது.
  • நீ காலையைக் கண்டிருக்கிறாய், இன்னும் மாலையைக் காண வில்லை
  • பிராணிகளின் படைப்பில் பெண்ணே முதன்மையான எழிலுடையவள்.
  • பெண்களை அழவிடுவதில் மனிதர்கள் கவனமா யிருக்கவேண்டும்; ஏனெனில் ஆண்டவன் அவர்களுடைய கண்ணீர்த் துளிகளை எண்ணிப் பார்க்கிறான்.
  • வாழ்க்கை மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கடன்தான மரணம் என்னும் கடன்காரன் அதைப் பெற்றுக் கொள்ள ஒருநாள் வருவான்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=யூதப்_பழமொழிகள்&oldid=37377" இருந்து மீள்விக்கப்பட்டது