விக்கிமேற்கோள்:கொள்கைகளும் வழிகாட்டல்களும்

விக்கிமேற்கோள் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தமிழ் விக்கிமேற்கோளின் நோக்கம்/குறிக்கோள்[தொகு]

எளிய தமிழில் மேற்கோள்கள் களஞ்சியத்தை உருவாக்குதலும், வரலாற்றில் மிகப் பெரிய மேற்கோள் களஞ்சியத்தை கொண்டருதலும் எமது தமிழ் விக்கிமேற்கோளின் முக்கிய குறிக்கோள்களாக அமைகின்றன.

கொள்கைகள்[தொகு]

விக்கிமேற்கோள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், முக்கியமாக கருதப்படுகின்றதுமான விக்கிமேற்கோளின் உருவாக்குனர்களாலும், உறுப்பினர்களாலும் உருவாக்கப்பட்ட கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் கொண்டுள்ளது.

முக்கியக் கொள்கைகள்[தொகு]

அனைத்துக் கொள்கைகளையும் படித்த பின்னர்தான் பங்களிக்கவேண்டும் என்ற தேவை இல்லை. ஆனால் முக்கியமான கொள்கைகளை அறிந்துகொள்வது, உங்களைத் தமிழ் விக்கிமேற்கோளின் செயற்பாடுகளுடன் இணைந்து இசைவாகப் பங்களிப்பதை விரைவுபடுத்தும்.

 1. நடுநிலை நோக்கு: கட்டுரைகளில் ஒரு பக்கச்சார்பு வாதங்களை மட்டும் எடுத்துக்கூறுவதைத் தவிர்த்துத் தகுந்த மாற்றுக் கருத்துக்களுக்கும், பார்வைகளுக்கும் மதிப்பளித்து உரிய இடம்தாருங்கள்.
 2. பதிப்புரிமைகளை மீறாதீர்கள்: விக்கிமேற்கோள் ஒரு கட்டற்ற மேற்கோள் கலைக்களஞ்சியம் ஆகும். இதில் பதிப்புரிமையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆக்கங்களைச் சேர்க்காமல் இருப்பது எமது குறிக்கோளுக்கு இன்றியமையாதது. பதிப்புரிமைகளை மீறாதிருப்பது சட்டச் சிக்கல்களையும் தவிர்க்கும்.
 3. எளிய தமிழில் தரமான கட்டற்ற மேற்கோள் கலைக்களஞ்சியம். இதுவே எமது முக்கிய நோக்கம். இதைத்தவிர எமக்கு எந்தவித அரசியல், பண்பாட்டு, பக்கச்சார்பு நோக்கங்களும் இல்லை. தனிப்பட்ட விக்கிமேற்கோளர்களின் கொள்கைகளுக்கும், அவர்களின் தமிழ் விக்கிமேற்கோள் தொடர்பற்ற கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் விக்கிமேற்கோள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.
 4. உடன் பங்காற்றும் பயனர்களின் பங்களிப்புக்களுக்கு மதிப்பளியுங்கள். தமிழ் விக்கிமேற்கோள் ஒரு கூட்டு மதிநுட்ப ஆக்கம் ஆகும். பிறரின் ஆக்கங்களுக்கு மதிப்பளிப்பது இத்திட்டத்துக்கு இன்றியமையாது. மேலும் தகவல்களுக்கு: w:Wikipedia:ஒழுங்குப் பிறழ்வுகள், w:Wikipedia:விக்கி நற்பழக்கவழக்கங்கள், en:Wikipedia:Resolving disputes.

கொள்கைகள் ஏன் தேவை?[தொகு]

எமது குறிக்கோள் எமக்கு முக்கியமானது. தமிழ் விக்கிமேற்கோள் உருப்பெற ஓர் ஒருமித்த தொலைநோக்கு திட்டக்கண்ணுடன் செயல்படுவது இன்றியமையாதது. எமது செயல்திட்டங்களை நெறிப்படுத்த எமது விழுமியங்களிலும், பண்பாட்டு சூழலும், நோக்கத்திலும் இருந்து எழும் தெளிவான கொள்கைகளும் வழிகாட்டல்களும் புரிந்துணர்வுகளும் எமக்கு தேவையாகின்றது.

வழிமுறை கேள்விகள்[தொகு]

கொள்கைகள் எப்படி முடிவு செய்யப்படுகின்றன?[தொகு]

தமிழ் விக்கிமேற்கோளில் இரண்டு முக்கிய கொள்கைத் தொகுதிகள் உண்டு. அவை

 • விக்கிமேற்கோளின் முக்கிய கொள்கைகள்
 • தமிழ் விக்கிமேற்கோளின் கொள்கைகள்

விக்கிமேற்கோள்,குறிப்பாக ஆங்கில விக்கிமேற்கோளின் எமக்குரிய கொள்கைகளை நாம் கவனத்தில்கொண்டும் மதித்தும் செயற்படுகின்றோம். எனினும் தமிழ் விக்கிமேற்கோளின் குறிக்கோள்களுக்கென அவ்வப்பொழுது கொள்கைகள் வகுத்து நடைமுறைப்படுகின்றன. தமிழ் விக்கிமேற்கோளின் கொள்கைகள் அனைத்தும் உடனடியாக வடிவம் பெறுவதில்லை. பல கொள்கைகள் பயனர்களின் புரிந்துணர்வுடன் எழுதப்படாமல் இருக்கின்றன. எனினும் வடிவு பெற்ற கொள்கைகள் எப்படி உருவாக்கம் பெற்று எழுதப்பட்டன என்பது கீழே விளக்கப்படுகின்றது.

 1. விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி மற்றும் பிற உரையாடல் பக்கங்களில் கொள்கைகள் திறந்த முறையில் தேவைக்கேற்ப பரிந்துரைக்கப்பட்டு அலசப்படுகின்றன (பரிந்துரைத்தல் (Recommendations or Proposal) -> கருத்துவேண்டல்/கலந்துரையாடல் (Request for Comments/Consultations) -> திருந்திய கொள்கைகள் அல்லது சீர்திருத்தப்பட்ட பரிந்துரைகள் (Refined Policies)). இச்செயற்பாடு திறந்தமுறையில் ஒளிவுமறைவின்றி (open and transparent), பொறுப்புணர்வுடன், பற்பல பயனர்களின் கருத்துகளுக்கும் செயற்பாடுகளுக்கும் மதிப்பளித்து மேற்கொள்ளப்படவேண்டும்.
 2. மிகப்பல கொள்கைகளுக்கு ஒரு இணக்க முடிவு எட்டப்பட்டு எழுதப்படுகின்றது. இணக்க முடிவே விரும்பப்படுகின்றது, எனினும் தேவையேற்படின் வாக்குபதிவும் மேற்கொள்ளப்படலாம். (Consensus or Democratic Agreement)
 3. பற்பல கொள்கைகள் இறுதியான இறுக்கமான வடிவு கொள்வதில்லை. பயனர்கள் எதிர்ப்பு மறுப்பு தெரிவிக்கும் பொழுது மீள்பரிசீலனைக்கு கொள்கைகள் ஈடுபடுத்தப்படும்.

மேலும் தகவல்களுக்கு: en:Wikipedia:How to create policy

கொள்கைகள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன?[தொகு]

தமிழ் விக்கிமேற்கோள் அதன் அதன் பயனர்களால் ஆக்கப்படுகின்றது. எனவே கொள்கைகளை ஆக்குவதும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் பயனர்களையே சாரும். தமிழ் விக்கிமேற்கோள் சமூகம் கூட்டாக கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது. மேலும் தகவல்களுக்கு:

கொள்கைகளின் வகைகள்[தொகு]

 • அலுவல்முறையான கொள்கைகள் (Official policies)
 • பரிந்துரையிலிருக்கும் கொள்கைகள் (Semi-policies or Proposed policies)
 • வழிகாட்டல்கள்

மேலதிக தகவல்களுக்கு: w:en:Wikipedia:List of policies

கையேடுகள், வழிகாட்டுக்கள், உதவிகள் பட்டியல்களுக்கு விக்கிமேற்கோள்:சமுதாய வலைவாசல் பக்கத்தைப் பார்க்கவும்.

விதிமுறைகளின் வகைகள்[தொகு]

 • பழக்கவழக்க விதிமுறைகள் - Behavioral: விக்கியின் சீர்தரம் தொடரபானவை.
 • உள்ளடக்க விதிமுறைகள் - Content
 • நடைமுறைப்படுத்தல் விதிமுறைகள் - Enforcement
 • கட்டுரைகளை நீக்குதல் தொடரபான விதிமுறைகள் - Deletion
 • சட்டம், பதிப்புரிமை தொடர்பான விதிமுறைகள் - Legal and copyright

இவற்றையும் பார்க்க[தொகு]