விக்கிமேற்கோள்:விக்கிமேற்கோள்
Jump to navigation
Jump to search
விக்கி மேற்கோள் (Wikiquote) விக்கிமீடியா நிறுவனத்தின் இன்னொரு திட்டமான இது விக்கி மென்பொருளைப் பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இது, புகழ்பெற்ற மக்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பழமொழி ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு ’மேற்கோள் களஞ்சிய’மாகும்.
தமிழிலும் செயல்பட்டு வருகின்ற இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுப் பின்னர்த் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும், சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது.