விடுதலை பாகம் 2
விடுதலை பாகம் 2 (Viduthalai Part 2) என்பது 2024 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வெற்றிமாறன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் மேனன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
1, ஆசிரியர் பெருமாளிடம் (பள்ளிக்கு வெளியே உள்ள ஒரு சிறுவன்)
நா படிக்க வரேன், என்னைய எல்லார் கூடவும் சமமா உட்கார வச்சி சொல்லி தருவீங்களா
2, பண்ணையாரைக் கொல்லவரும் பாதிக்கப்பட்ட ஒருவன்
நீ கூப்புட்றது என்னோட பேரு இல்ல டா, நான் சொல்றது தான் என்னோட பேரு
3, வாத்தியாரின் மனைவி வாத்தியாரிடம் உருக்கமாக கூறுவது.
இன்னைக்கு இவங்க பாக்குற 8 மணிநேர வேலை ,மாச கூலி ,போனஸ், ஞாயித்து கிழம விடுமுறைனு எல்லாமே யாரோ ஒருத்தன் இப்பிடி அடிபட்டு செத்து தான் வாங்கி குடுத்ததுனு அவங்களுக்கு புரியாது
4, பக்கத்து ஊரில் இருந்து அழைத்து வரப்படும் விவசாயக் கூலிகளைத் தடுத்து திருப்பி அனுப்பும் வாத்தியார் பெருமாள் அவர்களிடம் பேசுவது.
நீங்கள் லாம் ஒரே சாதின்னா, உங்க தலைவன் உனக்கு பொண்ணு கொடுப்பானா ?" .... " அது எப்படி கொடுப்பாரு, காசு - பணம் - சொத்து பத்து இருக்குறவங்களுக்கு தானே கொடுப்பாரு
5, காவலர்களைக் கொல்ல வாய்பிருந்தும் அவர்களை கொல்லாமல் திருப்பி அனுப்பும் வாத்தியார் பெருமாள் கூறுவது
மக்களுக்காக போராடுற எங்கள தீவிரவாதிங்கன்னு கட்டமைக்கிற உங்க அரசாங்கத்துக்கு உங்கள உயிரோட அனுப்பறது தான் எங்களோட பதில்
6, வாத்தியார் பெருமாள் தன் இயக்கத்தினரிடம் இறுதிகட்டத்தில் பேசுவது
நாம போராடுறது மக்களுக்காக,இனிமே நாம தனியா நின்னு போராடாம, மக்கள் கூட அவுங்கள முன்னாடி நிக்க வச்சி போராடனும்
7, பெருமாள் வாத்தியார் ஆங்காங்கே கூறுவது
வன்முறை எங்கள் மொழி அல்ல, ஆனால் அந்த மொழியும் எங்களுக்கு பேச தெரியும்
நீங்க எந்த மொழில பேசுறீங்களோ, அந்த மொழில தான நாங்க பதில் சொல்ல முடியும்
தத்துவம் இல்லாத தலைவர்களால ரசிகர் மன்றங்கள மட்டும் தான் உருவாக்க முடியும்
தலைவன பின்தொடராதிங்க தத்துவத்த பின்தொடருங்க அதுக்கு அழிவே இல்ல
சரியான தத்துவம், தனக்கான தலைவர்களை தானே உருவாக்கும், தத்துவத்த கொண்டு போய் சேக்குறதுதான் நம்ம வேலை
நல்லவங்களால மாற்றத்த ஏற்படுத்த முடியாது, அமைப்பும், கோட்பாடும் தேவை
தனிநபர்களால் தீர்வுகள தந்திட முடியும் னு மக்கள் நம்புற வரைக்கும், அவங்க போராட வரமாட்டாங்க
ஒடுக்குமுறைக்கு எதிரா போராடுற எல்லாருமே எங்க தோழர்கள், தலைவர்கள்
90 பைசா மூலதனம் கொண்ட பொருட்கள வச்சி 1.25 ரூபாய்க்கு சர்க்கரையா விக்கிறாங்க .... அந்த 90 பைசா மூலதனம் எப்படி 1.25 ரூபாயா மாறுதுன்னா, உங்களோட உழைப்பினால தான் .... உழைப்புக்கேத்த ஊதியம் நமக்கு கிடைக்கனும் .... அதுக்கு நாம போராடனும் ....