வில்லியம் மில்லர்
டாக்டர் வில்லியம் மில்லர் (Very Rev Dr William Miller, 13 சனவரி 1838 – சூலை 1923) என்பவர் ஒரு ஸ்காட்டிஷ் கல்வியாளர் மற்றும் மதராஸ்க்கான சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து மிஷனரியாகவும் இருந்தவராவார். 1893, 1895, 1899, மற்றும் 1902 ஆகிய ஆண்டுகளில் இவர் முறை மதராஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
இவரது மேற்கோள்கள்
[தொகு]கல்வி, நாகரிகம் முதலியவற்றால் செழிப்புற்றோங்கும் நாடுகளில், எவையெவை நன்மை என்று தோன்றுகின்றனவோ, அவைகளை இந்தியாவின் சீர்திருத்தத்தின் பொருட்டுப், பயன்படுத்தி இவ்விதமாய் இந்தியாவையும், இங்கிலாந்தையும் என்றும் மாறாத சங்கிலிகளினல் இணைப்பதன் பொருட்டுச் செய்யப்படும் ஒவ்வொரு சிறு முயற்சியும் , அரசினர் அளிக்கும் எல்லாப் பரிசுகளுக்கும் மேலானதென்றே நான் கருதுகிறேன். இப்படிப்பட்ட சிறந்த செயல்களைச் செய்வதில் பல்வேறு இடையூறுகளும் இன்னல்களும் நமக்குத் தோன்றும். இப்படிப்பட்ட தடைகள் இதில் மாத்திரமல்ல மனிதன் தன் வாழ்நாளைச் செலவிடக்கூடிய பற்பல காரியங்களிலும் இருக்கின்றன. ஆதலால், இவற்றைச் செய்து நிறைவேற்றுவதற்கு உதவி செய்யுமாறு, சென்னைக் கிறித்தவ கல்லூரிப் பழைய மாணவர்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். (30.4.1884, சென்னை மெமோரியல் மண்டபத்தில்][1]
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.