வி. பி. சிங்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஒரு துளி வானம்,ஒரு துளி கடல்.

விஸ்வநாத் பிரதாப் சிங் (ஜூன் 25 1931 - நவம்பர் 27, 2008) இந்திய குடியரசின் 10 வது பிரதமர் ஆவார். உத்திர பிரதேசத்தின் முதல்வராகவும், நிதித்துறை, பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் அமைச்சராகவும் பதவி வகித்தவர். மண்டல் கமிசன் அமைத்து பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதால் சமூக நீதிக் காவலர் என்றும் அழைக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  • நான் ரத்தமும், சதையுமாக உங்கள் முன் நிற்கிறேன். என்னை தாக்க வேண்டுமென்றால் என்னை மட்டும் தாக்குங்கள் ; நான் சமூக நீதிக்காக, சமூகத்தின் சமத்துவத்துக்காக செயல்பட்டேன் என்கிற உறுதி எனக்கு உள்ளது!
  • இந்த அரசியலின் நோக்கம், நூற்றாண்டுகளாக அரசியல், சமூக மற்றும் பொருளாதார அதிகாரம், உரிமைகள், சலுகைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும். அவர்கள் எதை கேட்கிறார்களோ எதை பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது. ஆகவே, அந்த சமூகங்களில் இருந்து தலைவர்கள் எழுந்து அதிகாரம் பெற்று அதை சிறப்பாக பயன்படுத்துகிற பொழுது என் வரலாற்று பங்களிப்பு முழுமை பெறுகிறது. பதவி என்பது இங்கே முக்கியமில்லை !
மீண்டும் பிரதமர் பதவி தன்னை நோக்கி வந்தபோது, அதை மறுத்து அவர் பேசியது.
  • ஒரு துளி வானம், ஒரு துளி கடல்.
வி.பி.சிங்கின் கவிதைத் தொகுப்பின் தலைப்பு.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வி._பி._சிங்&oldid=36265" இருந்து மீள்விக்கப்பட்டது