வெற்றியாளர்

விக்கிமேற்கோள் இலிருந்து

தளரா மனம் கொண்டு வெற்றி பெறுபவர்கள் வெற்றியாளர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  • சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
  • நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.
  • வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள். - நெப்போலியன் ஹில்.
  • அன்றாட வாழ்வின் சாதாரன விசயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.

- ஜோர்ஜ் வொசிங்டன்.

  • வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய். - வில் ரொகெர்சு.
  • பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள். - ஜோர்ஜ் பெர்னாட் ஷா.
  • வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்
  • தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை – புக்கன்ஸ்

சான்றுகள்[தொகு]

  1. http://tamilcube.com/res/tamil-quotes.aspx
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வெற்றியாளர்&oldid=14835" இலிருந்து மீள்விக்கப்பட்டது