வெற்றி மாறன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

வெற்றி மாறன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  • விசாரணை’ என்னை வைத்து தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட படம்னுதான் சொல்வேன்.[1]
  • படத்துல எங்கெல்லாம் தங்களோட உணர்வுகளை வெளிப்படுத்த முடியுதோ, அங்கெல்லாம் கைதட்டுறாங்க.[1]
  • ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு ஒரு பேட்டர்ன் சிக்கும். ஒரு ஸ்கிரிப்ட் எழுதி, அது திரைப்படமாக முழுமையடையும் முன்னர், இன்னொரு ஸ்கிரிப்ட எழுதினால், முதல் கதையில் இருந்து முக்கியமான சில விஷயங்கள் அடுத்த ஸ்கிரிப்டிலும் வரும்.[2]
  • 'புத்தக வாசிப்பு, ஒருவனுக்கு என்ன கொடுத்துவிடும்?' என சிலர் கேட்பது உண்டு. பாலுமகேந்திரா போன்ற ஒரு பெருங்கலைஞனின் எதிரே அமர்வதற்கான இருக்கையை அதுதான் எனக்கு வாங்கித் தந்தது.[3]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 விசாரணை என்னை வைத்து தன்னை உருவாக்கிய படம் - வெற்றிமாறன் பேட்டி. தினகரன் (11 பிப்ரவரி 2016). Retrieved on 6 சூன் 2016.
  2. வெற்றி மாறன் (25 மே 2016). "மைல்ஸ் டு கோ". ஆனந்த விகடன்: 52. 
  3. வெற்றி மாறன் (22 மார்ச்சு 2016). "மைல்ஸ் டு கோ". ஆனந்த விகடன்: 10. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=வெற்றி_மாறன்&oldid=14206" இருந்து மீள்விக்கப்பட்டது