வெ. சாமிநாத சர்மா

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

வெ. சாமிநாத சர்மா (17 செப்டம்பர் 1895 - 7 சனவரி 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்.

இவரது மேற்கோள்கள்[தொகு]

  • வாழ்க்கை வசதிகளை ஓரளவு பெற்றிருப்பவர்கள், நிரந்தர வருவாயுள்ளவர்கள், இப்படிபட்டவர்களுக்குத்தான் அதைரியமும், அவநம்பிக்கையும் உண்டாகின்றன. உடலை ஓடித்து அன்றாட ஜீவனத்தை நடத்துபவர்கள், இப்படி அதைரியமோ, அவநம்பிக்கையோ கொள்வதில்லை.[1]
  • இந்தியர்களில் பெரும்பாலோருக்குச் சுத்த உணர்ச்சி என்பது மிகவும் குறைவு என மேனாட்டார் சிலர் குறை கூறுவார்களானால் அதை நான் வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தம்மைப் பொறுத்தமட்டில் சுத்தமாயிருக்க வேண்டும் மென்று நினைகிகறார்களே தவிர, சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. குடிதண்ணீரில் கால் கழுவுவதும், கண்ட இடத்தில் எச்சில் துப்புவதும், குப்பைக் கூளங்களை அக்கம் பக்கத்திலேயே வீசியெறிவதும் அநேகருக்கு சர்வ சாதாரணப் பழக்கங்களாயிருக்கின்றன. இதில் தென்னாட்டவரைக் காட்டிலும் வட நாட்டவரைப் பெரிய குற்றிவாளிகளென்று சொல்ல வேண்டும்.[2]

இவரைக் குறித்து பிறர்[தொகு]

  • உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே. கண்ணதாசன்
  • ஆங்கிலத்தில் போதிய பயிற்சியில்லாத தமிழர்களும், ஆங்கிலமே தெரியாத தமிழர்களும் மேலைநாட்டுத் தத்துவ சாஸ்திரத்தையும், அரசியில் சாஸ்திரத்தையும் அத்துடன் பல அரசியல் ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளையும் தெரிந்து கொள்ள உதவிய பேருபகாரிகளில் முதன்மையாக இருப்பவர் வெ. சாமிநாத சர்மா ஆவா். _ கு. அழகிரிசாமி[3]
  • முதறிஞர் வெ. சாமிநாத சர்மா சர்மா என்னும் பெயர் இன்று பண்பட்ட அரசியில்வாதிகள் வணங்கிப் போற்றிப் புகழத்தக்கப் பெயர். அவர்கள் மற்க்க முடியாத பெயர். ருஷ்ய வரலாற்றையும், சீனப் புரட்சியையும், கார்ல் மார்க்ஸையும் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர். - எழுத்தாளர் விக்கரமன்[4]

சான்றுகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. வெ. சாமிநாத சர்மா (2006 செப்டம்பர் 19). எனது பர்மா வழி நடைப் பயணம். சென்னை: மகாகவி பதிப்பகம். pp. 60. 
  2. வெ. சாமிநாத சர்மா (2006 செப்டம்பர் 19). எனது பர்மா வழி நடைப் பயணம். சென்னை: மகாகவி பதிப்பகம். pp. 90. 
  3. வெ. சாமிநாத சர்மா (2006 செப்டம்பர் 19). எனது பர்மா வழி நடைப் பயணம். சென்னை: மகாகவி பதிப்பகம். pp. 179. 
  4. வெ. சாமிநாத சர்மா (2006 செப்டம்பர் 19). எனது பர்மா வழி நடைப் பயணம். சென்னை: மகாகவி பதிப்பகம். 
"https://ta.wikiquote.org/w/index.php?title=வெ._சாமிநாத_சர்மா&oldid=19115" இருந்து மீள்விக்கப்பட்டது